செய்தியும், சிந்தனையும்....!

துப்புக்கெட்டத்தனம்!

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதி தேர்வுக்கு வயது வரம்பு நிர்ணயம் : - பள்ளிக் கல்வித் துறை முடிவு.

வேலை வாய்ப்பு அளிக்கத் துப்பற்ற நிலையில், இதுபோன்ற துப்புக்கெட்ட அறிவிப்புகளை அறிவிப்பதில் மட்டும் குறைச்சல் இல்லை.

என் கடன் பணி செய்து கெடுப்பதே!' 

தமிழ்நாட்டின் மொத்த கடன் ரூ.4.85 லட்சம் கோடி.

‘‘என் கடன் பணி செய்து கெடுப்பதே'' என்று எடுத்துக் கொள்ளலாம்!.

ஊறுகாய் ஜாடியில்...

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் போக்குவரத்துத் துறையினர் வேலை நிறுத்தம்.

தடால் தடால் என்று திட்டங்களை ஒரு பக்கத்தில் (தேர்தலை மனதில் வைத்து) முதலமைச்சர் அறிவித்து வருகிறார். ஆனால், அரசுத் துறைப் பணியாளர்களின் நீண்ட காலக் கோரிக்கைகள் மட்டும் ஊறுகாய் ஜாடியில்!

ஒரே மொழி ஒரே கலாச்சாரம் எப்பொழுது? 

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை!' என்ற திட்டம் அமலுக்கு வந்தது.

ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் எப்பொழுது வரப் போகிறதாம்?

இதுதானே வேண்டாம் என்பது...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு - சரியான நேரத்தில், சரியான அறிவிப்பு வெளிவரும் : - எல்.முருகன், தலைவர், தமிழக பா....

தேர்தலுக்கு முந்தைய நாளா?

வாழ்க தேசிய ஒருமைப்பாடு? 

காவிரி - குண்டாறு திட்டத்துக்குக் கருநாடக அரசு எதிர்ப்பு.

வாழ்க தேசிய ஒருமைப்பாடு?.

முதலில் பா... தனது தீவிரவாதத்தை ஒழிக்கட்டும்! 

தீவிரவாத செயலை ஒழிக்க உலகளாவிய ஒத்துழைப்புத் தேவை :  - அய்.நா.வில் ஜெய்சங்கர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்.

முதலில் தீவிரவாத ஒழிப்பு பா...விலிருந்து தொடங்கட்டும்!.

தன் முதுகைத் தானே... 

வனத்துறை தொடர்பான அறிவிப்பை - நிதிநிலை அறிக்கையில் வெளியிட்ட போது மேஜையைத் தட்டுங்கள் என்று .தி.மு.. உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார் துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வம்.

தன் முதுகைத் தானே தட்டிக் கொள்வது என்பது இதுதானோ!

சுமையைத் தாங்கும் பயிற்சி

பிறக்கும் குழந்தையின் மீது கூட ரூ.62 ஆயிரம் கடன் - பட்ஜெட்பற்றி எதிர்க்கட்சித் தலைவர் மு..ஸ்டாலின்.

சுமையைத் தாங்கும் பயிற்சியை சின்ன வயது முதற்கொண்டே வழங்கவேண்டாமா?

அவாள் அவாள்தான்! 

தமிழக சட்டப்பேரவையில் ..சி., ஓமாந்தூரார், சுப்பராயன் படங்கள் திறப்பு.

1942 ஆகஸ்ட் போராட்டத்தின்போது ஒதுங்கிக் கொண்ட ராஜாஜிக்குக் கிடைத்த பதவிகளுள் பத்தில் ஒரு பங்கு செக்கிழுத்த செம்மல் ..சி.க்கு உண்டா? கடைசியில் எண்ணெய்க் கடை வைத்தல்லவா வயிற்றைக் கழுவ நேர்ந்தது. ()திலும் அவாள் அவாள்தான்!

Comments