தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் - தமிழர் தலைவர் சந்திப்பு

அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் 46 ஆவது அமர்வு இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவருவதற்கான முயற்சிகளை உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதில் கொண்டுவரப்படவிருக்கின்ற முக்கிய தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடிதம் வழங்கினார். தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செம்பியன் கடிதத்தைப் பெற்றுக்கொள்கிறார். கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், என்..பி.எம். தமிழ்நாடு பொறுப்பாளர் அருள்தாஸ் ஆகியோர் உடனிருக்கின்றனர். (சென்னை, பெரியார் திடல் - 15.2.2021)

Comments