செய்தியும் சிந்தனையும்

வாய்களுக்குச் சரியான பூட்டு

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகாருக்கு முகாந்திரம் உள்ளது.

'துக்ளக்'க்கும், பார்ப்பன ஏடுகளின் வாய்களுக்கும் சரியான பூட்டு!

மற்றொரு ஸ்லீப்பர் செல்லா?

கண்காணிப்பு வளையத்துக்குள் ...தி.மு.. சட்டமன்ற உறுப்பினர்கள் 

மற்றொரு ஸ்லீப்பர் 'செல்லை' எதிர்பார்க்கலாமா?

கார்கே யார்?

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார் மல்லிகார்ஜுன கார்கே!

ஆரியர்கள் இந்த நாட்டுக்கு வெளியிலிருந்து குடியேறியவர்கள் என்று மக்களவையில் முழங்கியவர் இவர்.

'கடன்கார' கடவுளா?

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் நிருவாகம் அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.11.7 கோடியை செலுத்த முடியவில்லை - காரணம் கரோனாவால் வருவாய் இல்லையாம்.

எல்லாம் வல்ல கடவுள் என்பார் - அவரையே கரோனா கடன்காரராக ஆக்கி விட்டதே! கரோனாவா கடவுளா? யாருக்குச் சக்தி!

Comments