புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாற்றம் நாராயணசாமி வரவேற்பு!

புதுச்சேரி, பிப். 17 புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண்பேடியை நீக்கி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி அரசு, கிரண்பேடி இடையே மோதல் நிலவி வந்த நிலையில் குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். கிரண் பேடியை நீக்கக்கோரி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அண்மையில் கடிதம் அளித்த நிலையில் குடியரசு தலைவர் மாளிகை இதனை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நடைபெற்று வரும் நிலையில் துணை நிலை ஆளுநர் பொறுப்பு தெலங்கானா ஆளுநர் தமிழிசையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எங்களின் தொடர் போராட்டத்திற்கு பின் கிரண்பேடியை மாற்றியதை வரவேற்கிறோம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி மக்களின் உணர்வுகளை மதிக்காமல் கிரண்பேடி தன்னிச்சையாக செயல் பட்டார் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு தடையாக கிரண்பேடி இருந்ததாக பலமுறை மத்திய அரசிடம் கூறிதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


Comments