திருப்பத்தூர் மாவட்டத்தில் களப்பணியைத் தீவிரப்படுத்த அமைப்பு ரீதியாக சில மாற்றங்கள்

திருப்பத்தூர், பிப். 3- திருப்பத்தூர் மாவட்ட திரா விடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 30.01.2021 அன்று மாலை 5.00 மணிக்கு எம். . எஸ்.ஆனந்தன் சாந்தி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட திராவிடர் கழக இணைச்செயலாளர் எம். கே.எஸ் இளங்கோவன் கூறிய கடவுள் மறுப்புடன் தொடங்கியது. மாவட்ட செயலாளர் வி.ஜி.இளங்கோ அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார். மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி.எழிலரசன் தலைமை தாங்கினார்.கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கியும், நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை நினைவூட்டியும், திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேக ரன் மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெய ராமன், வேலூர் மண்டலத் தலைவர் வி.சடகோபன், தருமபுரி மண்டல தலைவர் பழ.பிரபு ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) 12.12.2020 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் கழகத் தலைவரின் தலைமையில் நடைபெற்ற தலைமை செயற்குழுவின் தீர்மானங்களை ஏற்று செயலாக்குவது என முடிவு செய்யப்படுகிறது.

2) ஒன்றிய, நகர தலைநகரங்களில் "திராவிடம் வெல்லும்" என்ற தலைப்பில், சிறப்புக்கூட்டம் நடத்துவதுடன் கிளைக் கழகங்கள் தோறும் தொடர் கூட்டங்கள் நடத்துவது என தீர்மானி க்கப்பட்டுள்ளது.

3) மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் புதிய உறுப்பினர்களை சேர்த்து அமைப்பினை விரிவுபடுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

4) உயிர்காக்கும் போராட்டமான விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டம் வெல்லட்டும்! போராட்ட களத்தில் உயிர் நீத்த தியாக செம்மல் களுக்கு வீர வணக்கத்தை செலுத்துவோம்! தமிழர் தலைவரின் வழிகாட்டுதல் ஒன்றே போராட்டத்தின் இறுதி முடிவாக யாவருக்கும் அமையட்டும்! என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

5) தருமபுரி மண்டலத்திலிருந்து திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத்தை வேலூர் மண்டலத் துடன் இணைத்திடுமாறு, தமிழர் தலைவர் அவர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

6) திருப்பத்தூர், மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக்கழக புதிய பொறுப்பாளர்களை நியமிக்கு மாறு கழக தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் பரிந்துரைக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் புதிய பொறுப்பாளர்கள்

மாவட்டத் தலைவர்: கே.சி. எழிலரசன், மாவட் டச் செயலாளர்:  வி.ஜி.இளங்கோ. மாவட்டத் துணைத்தலைவர்: தங்க அசோகன், மாவட்ட இணைச்செயலாளர்: எம்.கே.எஸ்.இளங்கோவன், மாவட்டத் துணைச்செயலாளர்: பன்னீர்செல்வம்

மாவட்ட மகளிரணி

தலைவர்: .கவிதா, செயலாளர்: .வெண் ணிலா,  துணைத்தலைவர்: தாமரை

மாவட்ட மகளிர் பாசறை

மாவட்டத் தலைவர்: சி.சபரிதா

மாவட்ட இளைஞரணி

மாவட்டத் தலைவர்: .மதியழகன், மாவட்டச் செயலாளர்: தே.பழனிச்சாமி

மாவட்ட மாணவர் கழகம்

தலைவர்: .தமிழ்ச்செல்வன்

மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்

மாவட்டத் தலைவர்: சி.தமிழ்ச்செல்வன், செயலாளர்: .வெங்கடேசன்

மாவட்ட ஆசிரியரணி

தலைவர்: இரா.தட்சிணாமூர்த்தி, செயலாளர்: பாபு, அமைப்பாளர்: கோ.திருப்பதி

திருப்பத்தூர் நகரம்

தலைவர்: காளிதாஸ், செயலாளர்: .டி.ஜி. சித்தார்த்தன்,  அமைப்பாளர்: பெரியார்

இளைஞரணி

தலைவர்: ஜி.சுரேஷ், செயலாளர்: பாலாஜி

திருப்பத்தூர் ஒன்றியம்

தலைவர்: எம்..எஸ். ஆனந்தன், செயலாளர்: திருஞானம்

சோலையார்பேட்டை நகரம்

தலைவர்: என்.அரி, செயலாளர்: ஜே.எம்.பி. வள்ளுவன்

சோலையார்பேட்டை ஒன்றியம்

தலைவர்: நரசிம்மன், செயலாளர்: இராமச் சந்திரன்

ஆம்பூர் நகரம்

தலைவர்: இரவி, செயலாளர்: புரட்சி

ஆம்பூர் ஒன்றியம்

தலைவர்: வெற்றிகொண்டான், செயலாளர்: வெங்கடேசன்

வாணியம்பாடி நகரம்

தலைவர்: அன்புசேரன், செயலாளர்: காசி, அமைப்பாளர் வினாயகமூர்த்தி

கந்திலி ஒன்றியம்

தலைவர்: பெ.இரா.கனகராஜ், செயலாளர்: ஜி.பெருமாள்

நாட்றம்பள்ளி பகுத்தறிவாளர் கழகம்

அமைப்பாளர்: வே.மேகநாதன்

கிளைகள்

தோக்கியம்: அமைப்பாளர், கென்னடி, சுந்தரம் பள்ளி: அமைப்பாளர் கோ.சங்கர், காகங்கரை: அமைப்பாளர் சி.சந்தோஷ், கண்ணாலப்பட்டி: அமைப்பாளர் தசரதன், நத்தம்: அமைப்பாளர் வை.அன்பழகன் லக்கிநாயக்கன்பட்டி: அமைப்பா ளர் சரவணன்

திருப்பத்தூர்

பகுத்தறிவாளர் கழகம்

தலைவர்: நேரு, செயலாளர்: லெட்சுமணன்.

Comments