ஆசிரியருக்குக் கடிதம் : செருப்பு ஆண்ட நாடு இது!

உண்மையிலேயே இந்த நாட்டை யார் ஆண்டாலும் நமக்குக் கவலையில்லை. ஒரு காலத்தில் ஓர் ஆரியனின் ஒரு ஜதை செருப்பு 14வருஷ காலம் இந்த நாட்டைஅரசாண்டதாக உள்ள கதையை பக்தி விசுவாசத்தோடு படிக்கும் மக்களுக்கு மனிதனே அல்லாமல் ஓர் இழிவான மிருகம் நாய், கழுதை ஆண்டால்கூட அது அதிகமான அவமானம் என்றோ குறை யென்றோ நான் சொல்லவரவில்லை. ஆனால் மனிதனானாலும் கழுதையானாலும் என்ன கொள்கை யோடு என்னமுறையோடு ஆட்சிபுரிகின்றது; அதனால் பொதுமக் களுக்கு என்ன பலன் என்பதுதான் என் கவலை..! 

1.6.1937இல் பெரியார் ஏழாயிரம் பண்ணையில் நிகழ்த்திய உரையில் இருந்து.

- ‘குடிஅரசு' 6.6.1937

மேற்குறிப்பிட்ட அய்யாவின் வரிகள் இன்றைக்கும் பொருந்துகின்றனவே?

அன்புடன்

.செல்வம், பஹ்ரைன்

Comments