ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·     இந்தியாவில் சில பகுதிகளில் பெட்ரோல் லிட்டர் ரூ.100 என விற்கப்படுகிறது. இதற்கு பிரதமர் மோடி தான் பதில் சொல்ல வேண்டும். முந்தைய ஆட்சியின் பிரதமர்களான நேருவும், இந்திரா காந்தியும் அல்ல என மூத்த எழுத்தாளர் ஆகார் படேல் குறிப்பிட்டு உள்ளார்.

·     பன்னாட்டு இணைய வழி கருத்தரங்கங்களுக்கான கட்டுப்பாட்டு விதிகளை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என பல அறிஞர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

டெக்கான் கிரானிகல், சென்னை:

·     பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது.

·     புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இருந்து அய்ந்து சட்ட மன்ற உறுப்பினர்கள் விலகியதாலும், நியமனம் செய்யப்பட்ட பாஜகவைச் சேர்ந்த 3 உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது என்ற தீர்ப்பாலும், வே. நாராயணசாமி தலைமையிலான அரசு பதவி விலகல் கடிதத்தை துணை நிலை ஆளுநரிடம் அளித்தது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     கூட்டத்தைத் திரட்டுவதன் மூலம் வேளாண் சட்டங்களை ரத்து செய்துவிட முடியாது என மத்திய விவசாய அமைச்சர் தோம ரின் பேச்சுக்கு, மக்கள் திரள்வதன் மூலம், அரசுகள் மாறுகிறது என விவசாய அமைப்பின் தலைவர் ராகேஷ் திகாயத் பதிலடி தந்துள்ளார்.

·     மிக விரிவாக நாடு முழுவதும் விளம்பரம் செய்யப்பட்ட பசு மாட்டு தேர்வு, ஆயோக் தலைவரின் பதவி விலகலால், ரத்து செய்யப் பட்டது.

·     ஒரே குரலில் பேசும் ஒரு ஜனநாயகம், குடிமக்களின் உரிமை களைவிட  குடிமக்களின் கடமைகளைவிட முக்கியம் என்பதும், சுதந்திரத்தைவிட கீழ்படிதலும், ஒரே கருத்தியலைப் பின்பற்றுவதற்கு  பயத்தை உருவாக்குவதும், இது நிர்வாக அதிகாரத்தின் மீதான கட்டுப் பாடுகளை பலவீனப்படுத்துவதும், விதிமுறைகளுக்கு முரணானது மாகும். ஜனநாயகக் கோட்பாட்டாளர்களைப் பொறுத்தவரை, இவை அனைத்தும் சர்வாதிகாரத்தை  நோக்கி  செல்வதற்கான அறிகுறி களாகும். ஜனநாயகமாக இருப்பதன் அர்த்தத்தை தேர்தல்களால் மட்டுமே வரையறுக்க முடியாது என பிரவுன் பல்கலைக்கழக பேராசிரியர் அசுதோஷ் வார்ச்னி தெரிவித்துள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     விவசாய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான சாம்யுக்தா கிசான் மோர்ச்சா, மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளை "அவமதித்ததாக" குற்றம் சாட்டியுள்ளது. தற்போதைய ஆர்ப்பாட்டங்கள் மத்திய அரசு மீது விவசாயிகளின் மனதில் வளர அனுமதிக்கப்பட்ட கோபத்தின் விளைவாகும் என்று அமைப்பின் தலைவர் திகாயத் குற்றம் சாட்டினார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

·     ரயில்வேயை தனியார்மயமாக்குவதற்கான மத்திய அரசின் நோக்கம் ரயில்களில் பயணிக்கும் லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு "அச்சுறுத்தல்" என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

- குடந்தை கருணா

23.2.2021

Comments