பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஒடிசாவில் ஏழு மணி நேரம் முழு அடைப்பு

புவனேஷ்வர், பிப். 16- பன்னாட்டு சந்தை யில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப் படுகிறது. அந்தவகையில் கரோனாவுக்கு பிறகு தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து சுமார் ஓராண்டுக்குப்பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 61 டாலரை எட்டியுள்ளது.

இது இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையில் எதிரொலித்து வருகிறது. அது மட்டுமின்றி இந்தியாவில் சில்லறை விற் பனையில் பெட்ரோல், டீசலுக்கு முறையே 61 சதவீதம் மற்றும் 56 சதவீதம் வரியை மத்திய-மாநில அரசுகள் விதிக்கின்றன. இதனாலும் எரிபொருள் விலை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. தொடர்ந்து 8ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வை சந்தித்தது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்கட்சி கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஒடிசாவில் 7 மணி நேரம் முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இதன் படி, அங்கு முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

Comments