இசுலாமியர் அல்லாத மாணவிகளின் முகத்தை மூட கட்டாயப்படுத்தக்கூடாது

இந்தோனேசிய நாடு உத்தரவு

ஜகார்த்தா, பிப். 9- இந்தோனே சிய நாட்டின் மக்கள் தொகை யில் பெரும்பான்மையராக இசுலாமியர் உள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டி லுள்ள பள்ளிகளில் மாணவி கள் முகத்தை மூடுவதற்கான மதஅடிப்படையிலான கட் டுப்பாடு நீக்கி உத்தரவிடப் பட்டுள்ளது.

மாணவிகள் முகத்தை மூடிச்செல்வதற்கு அந்நாட்டி லுள்ள இசுலாமியர் அல்லாத கிறித்தவமாணவியர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

முசுலீம்கள் மதரீதியில் கடைப்பிடிக்கும் அப்பழக் கத்தை முசுலீம் அல்லாதாரும் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற கட்டாயத்தை நீக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து சமூக செயற் பாட்டாளர்கள் வரவேற்று உள்ளனர்.

உத்தரவை பிறப்பித்துள்ள அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சர் நாடியெம் மகரிம் உத்தரவை நடைமுறைப்படுத் தாத பள்ளிகள்மீது நடவ டிக்கை எடுக்கப்படும் என் றும், அப்பள்ளிகளுக்கு அரசு வழங்கிவரும் நிதியை நிறுத்த நேரிடும் என்றும் எச்சரித்து உள்ளார்.

வங்கதேச முற்போக்கு எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் தமது டிவிட்டர் பதிவில் இந்தோனேசிய நாட்டின் புர்கா தடையுத்தரவை வர வேற்றுள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.

Comments