செய்தியும், சிந்தனையும்....!

இப்படி சொன்னால்தான் விளங்கும்!

வாட்ஸ் அஃப்பில் இப்படியொரு பதிவு பெட்ரோல் விலை, ராமரின் இந்தியாவில் ரூ.92 புள்ளி 86. சீதையின் நேபாளத்தில் ரூ.53. இராவணனின் இலங்கையில் ரூ.51..

ராம ராஜ்ஜியக்காரர்களுக்கு இப்படி சொன்னால்தான் விளங்குமோ!

பிரிண்ட் எடுத்தால் காகித பட்ஜெட் - அப்படித்தானே!

மத்திய அரசு இவ்வாண்டு நிதி நிலை அறிக்கைக்கு டிஜிட்டல் பட்ஜெட் என்று பெயர் கொடுத்துள்ளது.

மடிக்கணினியிலிருந்து பிரிண்ட் எடுக்காமல் படித்தால் அதற்குப் பெயர் டிஜிட்டல் பட்ஜெட்டா?

பார்ப்பனர் எதிர்ப்பு என்பது...?

பார்ப்பான் மேல்ஜாதியாக இருக்கக் கூடாது என்பதுதான் என் எண்ணமே தவிர, அவன் பணக்காரனாக இருக்கக் கூடாது என்பது என் எண்ணம் இல்லை: - தந்தை பெரியார். 

பார்ப்பனர்களை தந்தை பெரியார் எதிர்ப்பது எந்த அடிப்படையில் என்பது இப்பொழுதாவது புரிகிறதா?

சபாஷ் சரியான கேள்வி!

சாகும்போது நோக்கு கடவுள் நம்பிக்கை வரும்டா: - மதவாதிகள்

அப்ப கூட நம்பிக்கைதான் வருமா - கடவுள் வரமாட்டானா? 

Comments