உத்தரகாண்ட் பேரிடர் - மத்திய மின்தொகுப்பிற்கான விநியோகம் பாதிப்பு!

அரித்துவார், பிப். 8 உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவை ஒட்டி, தேசிய மின்சார விநியோக கட்டமைப்பிற்கு மின்சார வழங்கும் 200 மெகாவாட் மின்சாரம் விநியோகம் பாதிக்கப்பட்டுள் ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்மாநிலத்தின், தேரி மற்றும் கொட் டேஷ்வர் ஆகிய இடங்களில் அமைந்த பிளாண்ட்டுகளை உள்ளூர் நிர்வாகம் மூடியதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திலுள்ள பெரிய பனிப்பாறை உருகியதால், தவுலி கங்கா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அந்த ஆற்றின் கரையி லிருந்த மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. பலரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேரி மற்றும் கொட்டேஷ்வர் ஆகிய இடங்களிலுள்ள பவர் பிளான்ட்டுகள் மூடப்பட்டுவிட்டன. இதனால், தேசிய மின்சார விநியோக கட்டமைப்பிற்கு சென்றுசேர வேண்டிய சுமார் 200 மெகாவாட் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், மாநில அரசு நடத்தும் என்டிபிசி எனப்படும் மிகப்பெரிய நீர்மின்சக்தி திட்டத்தில் இடம்பெற்றுள்ள அணைகளில் ஒன்றான தபோவன் விஷ்னுகாட் அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பலகோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படும் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

 

'பாரத ரத்னா' பிரச்சாரத்தை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ள ரத்தன் டாடா

மும்பை, பிப். 8 தனக்குபாரத ரத்னாவிருது வழங்கப்பட வேண்டுமென்று எழும் கோரிக்கைகள் நிறுத்தப்பட வேண்டு மென்று  தெரிவித்துள்ள ரத்தன் டாடா, இந்தியாவின் வளர்ச்சிக்காக உழைப்பதில் தான் மகிழ்ச்சியாக உள்ளதாக குறிப்பிட் டுள்ளார்.

மும்பையில் உள்ள தொழிலாளர் அமைப்பைச் சேர்ந்த ஒரு பிரிவினர், சமூக வலைதளங்களில் ரத்தன் டாடாவிற்கு, இந்தியாவின் உயரிய விருதானபாரத ரத்னாவிருது வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர். இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில, இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரத்தன் டாடா, “சில தரப்பு மக்களால், எனக்குபாரத ரத்னாவிருது கொடுக்கப்பட வேண்டு மென்று சமூகவலைதளங்களில் எழும் கோரிக்கைக்கு மதிப்பளிக்கிறேன். ஆனால், எனது பணிவான வேண்டு கோள் என்னவென்றால், அந்தப் பிரச் சாரம் நிறுத்தப்பட வேண்டுமென்பது தான்.

ஒரு இந்தியனாக இருப்பதை நல் வாய்ப்பாக உணரும் நான், நாட்டின் வளர்ச்சி மற்றும் வளத் திற்காக பங்களிக்க முயல்கிறேன்என்றுள்ளார்.

 

குலாம் நபி ஆசாத் பதவிக்காலம் முடிகிறது

புதுடில்லி. பிப். 8 காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத், நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு எதிர்க்கட்சி தலை வராக இருக்கிறார். அவரது பதவிக்காலம் வரும் 15 ஆம் தேதியுடன் முடிகிறது.

காஷ்மீர் மாநில சட்டப்பேரவையில் இருந்து  மாநிலங் களவைக்கு தேர்ந் தெடுக்கப்பட்டவர், ஆசாத்.

ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு தகுதியை  ரத்து செய்துள்ள மத்திய அரசு, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித் துள்ளது. அங்கு தேர்தல் நடந்தால் மட்டுமே ஆசாத், மீண்டும் எம்.பி. ஆகலாம். எனவே, குலாம் நபி ஆசாத்துக்கு பதிலாக புதிய எதிர்க் கட்சி தலைவர் நியமிக்கப்பட வேண் டும்.

மக்களவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் மத்திய அமைச்சர் .சிதம்பரம், மத்திய பிரதேச முன்னாள் முதல்-அமைச்சர் திக் விஜய் சிங் ஆகிய மூன்று பேர் பெயர்கள் காங்கிரஸ் மேலிடத்தால் பரிசீலிக்கப் பட்டன.

 

Comments