திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதும் மாவட்டம்தோறும் மகளிருக்கான தனி நீதிமன்றம் அமைக்கப்படும்: கனிமொழி எம்.பி.

நாமகிரிப்பேட்டை, பிப். 15- சட்டப் பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற தும், மாவட்டம்தோறும் மக ளிருக்கான தனி நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப் படும் என மக்க ளவை உறுப் பினர் கனிமொழி தெரிவித்தார்.

விடியலை நோக்கி ஸ்டா லின் குரல்பிரச்சார பயணம் மேற் கொண்டுள்ள திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., நேற்று (14.2.2021) நாமக்கல் மாவட் டம் ராசிபுரம், நாமகிரிப்பேட்டையில் ஆதரவு திரட் டினார். அப்போது, நாம கிரிப்பேட்டை ஒன்றியம் தண்ணீர் தொட்டி பகுதியில், பல்வேறு கட்சியில் இருந்து விலகிய 2 ஆயிரம் பெண்கள், திமுகவில் இணைந்தனர்.

பின்னர், நடைபெற்ற கலந்துரையா டல் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: 100 நாள் வேலை திட்டத்தில்,தமிழக அரசு ரூ.420 கோடி வரை ஊழல் செய்துள்ளது. 100 நாள் வேலை வழங்குகிறோம் என்று கூறி மாதத்திற்கு 10 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. திமுக தலை வர் தளபதி மு..ஸ்டாலின் முதல்வரான வுடன், 100 நாள் வேலையை 150 நாட் களாக உயர்த்தி, அனைவருக்கும் வேலை கிடைக்க வழிவகை செய்யப்படும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண் களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்களது வாழ் வாதாரத்தை பெருக்க சுழல் நிதியும் வழங்கப்படும். மேலும், நகைக்கடன் தள்ளுபடி, கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்று தலைவர் அறிவித்துள்ளார்.

தற்போது முதியோர்களுக்கு உதவித் தொகை முழுமையாக வழங்கப் படுவதில்லை எனவும், அதிமுக ஆட்சி யில் ரேஷன் கடைகள் நியாயமாக செயல் படு வதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த வுடன் இந்த குறைகள் களையப்படும். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், மாவட் டம் தோறும் மகளிருக்கான தனி நீதி மன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அவர் பேசினார். ராசி புரம் அருகே அத்தனூர் பேரூராட்சியில், நெசவாளர்களின் குறைகளை கனி மொழி எம்பி கேட்டறிந்தார். திமுக ஆட்சி அமைந்தவுடன் நெசவாளர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும். நெசவா ளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என்றார்.

ராசிபுரம் அருகே பிள்ளா நல்லூர் வாரச்சந்தையில்,கனிமொழி எம்பி, வியாபாரிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து பேசினார்.

Comments