வாக்குச் சீட்டு முறைக்கு நாடு திரும்புமா?

மராட்டிய மாநில அரசு விரைவில் வாக்குச் சீட்டு முறையையும் மின்னணு வாக்கு இயந்திரத் துடன் சேர்க்க  சட்டம் இயற்ற உள்ளது. நாடெங்கும் எதிர்க்கட்சிகள், மின்னணு வாக்கு இயந்திரப் பயன்பாட்டுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனஆனால் ஆளும் பாஜக அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக்கையைக் கவனத்தில் கொள்ளாததால் தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது மகாராட்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது.  இங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வாக்குச் சீட்டையும் வாக்காளர்கள் விரும்பினால் பயன்படுத்தலாம் என ஒரு சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.  விரைவில் மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் இம்முறை அமலுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

மாநில சட்டப்பேரவை இத்தகைய சட்டங்களை இயற்ற இந்திய அரசமைப்பு சட்டப்படி விதி எண் 328 இன் கீழ் அதிகாரம் உள்ளது.  இதையொட்டி மகாராட்டிரா சட்டப் பேரவை தலைவர் நானா படேல் ஒரு கூட்டம் நடத்தி உள்ளார். இதில் மாநில தேர்தல் ஆணையர், சட்டம்  நிதி  செயலர்,  சட்டப்பேரவை அமைச்சர் அமித் தேஷ்முக் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

மின்னணு வாக்குப்பதிவு முறையில் குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. குஜராத்தில் வாக்களித்தோரின் எண்ணிக்கையை விட பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அதிகம் இருந்தது, அதே போல் பீகார் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் இரண்டிலுமே வாக்குப் பதிவு கருவிகள் பழுதான நிலையிலும் வாக்குப் பதிவு நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறி விக்கப்பட்டன. இது தொடர்பாக பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலை யிலும் தொடர்ந்து மின்னணு கருவிகள் மூலமே தேர்தல் நடைபெற்று வருகிறது,

பல மாநில அரசுகள் மின்னணு வாக்குப்பதிவு குறித்து கருத்து தெரிவித்த போதிலும், மத்திய அரசு விடாப்பிடியாக மின்னணுவாக்குப்பதிவு கருவிகளை கைவிட மறுத்து வருகிறது, சமீபத்தில் வாக்குச்சீட்டு முறையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக மற்றும் அதன் ஆதரவு உறுப்பினர்கள் படுதோல்வியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ராஜஸ்தானில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பிட்சார் நகராட்சியில் 106ஆம் எண் வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட தர்மேந்திரா விற்கு அவர் வாக்கு மட்டுமே   கிடைத்திருக்கிறது. அவரது மனைவி, மகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர் 5 பேரின் வாக்குகள் கூட பாஜகவிற்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியலை நாம் ஏற்றுக் கொள்கிறோம்; அதே நேரத்தில் மின்னணு இயந்திர வாக்கு முறையில் சந்தேகத்தின் நிழல்படியும் நிலையில்  'சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்' என்பதற்கு ஏற்ப தேர்தல் முறை அமைவது அவசியம்.

வளர்ந்த பல நாடுகளிலும்கூட வாக்குச் சீட்டு முறை இருக்கவே செய்கிறது. மத்திய பா... அரசு மின்னணு இயந்திர வாக்கு முறையில் மூர்க்கத்தனமாகப் பிடிவாதம் காட்டும் நிலையில், இந்த முறைமீது மக்களுக்கு மேலும் அய்யப்பாடு மூண்டு நிற்கிறது. ஏனெனில் எந்த எல்லைக்கும் சென்று தவறுகள் செய்வதில் சங்பரிவார்கள் சூரர்களாயிற்றே!

Comments