பார்ப்பனர்களின் அறுவடைக்கு காலம், இடம், வரம்பேது?

மதுக்கடையில் பூஜை செய்யும் பார்ப்பனர்

கோயில்களில் பூஜை, திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் மந்திரம் ஓதி மக்களின் மூடநம்பிக்கையை முதலீடாக்கி காலம் கால மாக சுரண்டிவரும் பார்ப்பனர்கள் இடம், பொருள், ஏவலைப்பற்றியெல்லாம் கவலையின்றி தங்களின் அறுவடையிலேயே குறியாய் இருப்பர். அதற்கான சான்றுகளில் ஒன்றாக மதுக் கடைக்கு பார்ப்பனர் பூஜைசெய்யும் படம் சமூக வலைத் தளங்களில் உலா வந்து கொண்டிருக் கிறது.

திருமணத்தை நடத்தி வைத்து மந்திரம் ஓதுவது போல அர்ச்சகப் பார்ப்பான் சாராயக் கடைக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்து குத்து விளக்கு ஏற்றி மந்திரம் ஓதுகிறான். "வருமானம் எந்த வடிவில் வந்தால் என்ன? தனக்குத் தானே லாபம் என்பதே பார்ப்பனத் தந்திரம்!" என்று அப்பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments