கூடுவாஞ்சேரி மா.இராசு இல்ல மண விழா

கூடுவாஞ்சேரி, பிப். 10- கழகத் தோழர்கள் மா.இராசு - சா.நூர்சகான் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 6.12.2021 அன்று மாலை கூடுவாஞ்சேரியில் நடை பெற்றது.

திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்கு ரைஞர் .அருள்மொழி வாழ்த்துரை வழங்கினார். சென்னை மண்டல கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி தலைமை தாங்கினார். மா.இராசு வர வேற்புரை ஆற்றிட, இசையின்பன் தொகுப்புரை வழங்கிட நிகழ்வு சிறப்புடன் நடந்து முடிந்தது.

முடிவில் அனைவருக்கும் நமது இயக்க நூல்கள், துண்டறிக்கைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நிகழ்வில் பசும்பொன் செந்தில்குமாரியிடம் (பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்) மணமக்கள் சார்பாக ரூ. 5,000 திருச்சி நாகம்மை குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

சா.நூர்சகான் நன்றியுரை வழங்கினார்.

நிகழ்வில் வழக்குரைஞர் .அருள்மொழியிடம் ஒரு ஆண்டு விடுதலை சந்தா ரூ. 1,800அய் திருக்குறள் வெங்கடேசன் வழங்கினார்.

Comments