கைவினைப் பொருள்களின் தொகுப்புகள் அறிமுகம்

சென்னை, பிப். 14- உலகின் முன்னணி கற்பனைத் திறன் வாய்ந்த தளமாகவும் சோசியல் எடிட்டிங் துறையின் முன்னணி ஆப் ஆகவும் திகழும் பிக்ஸ் ஆர்ட் (PicsArt) நிறுவனம், டிஜிட்டல் ஸ்டிக்கர்கள், டெம்ப்ளேட்கள், பேக்ரவுண்ட் கொண்ட தொகுப்பு களை அறிமுகப்படுத்தி, இளைஞர்கள் தங்களது அன்பைப் பகிர்ந்து கொள்ள வழிவகை செய்துள்ளது.

இளைஞர்கள் ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்து, தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதத்தை, தற்போது கரோனா பெருந் தொற்று நோய் மாற்றியுள்ளது. அதற்காக அவர்கள் - உள்ளூரில் இருந்தாலும் அல்லது வெளியூரில் இருந்தாலும், தங்கள் அன்பிற்கு உரியவர்கள் உடன் அன்பைப் பகிர்ந்து கொள்வதை நிறுத்தி விட இயலாது அல்லவா? எனவே, பிக்ஸ் ஆர்ட் நிறுவனம் தமது இணையர் அன்புணர்வைப் பகிர்ந்து கொள்ள புதுவகையான கலை தொகுப்புகளை வெளியிட்டுள்ளது என இந்நிறுவன தலைவர் ரவிஷ ஜெயின் தெரிவித்துள்ளார்.

Comments