முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் இராயபுரம் சா.பரமசிவத்திற்கு நமது வீர வணக்கம்!

நமது இயக்கத்தில் நீடா மங்கலம் திராவிடர் கழக மேனாள் ஒன்றியத் தலை வராக இயக்கத் தொண் டாற்றியவரும், பல போராட் டங்களில் சிறை சென்றவரு மான முது பெரும் பெரியார் பெருந் தொண்டர் இராயபுரம் தோழர் மானமிகு சா.பரமசிவம் அவர்கள் (வயது 83) உடல்நலக் குறைவினால் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துன்பமும், துயரமும் அடைகிறோம்.

இன்று (17.2.2021) அதிகாலை 2 மணியளவில் அவர் மறைவுற்றார் என்ற நிலையில், அவரது இழப்பு அக்குடும்பத்திற்கு மட்டுமல்ல, இயக்கக் குடும்பத்திற்கும் பெரும் இழப்பாகும். எப்போதும் நம்மிடம் தனி அன்பு பூண்டவர்.

அவரை இழந்து வாடும் அவரது வாழ்விணையர் அம்மா அம்சவள்ளி, மகள்கள் விஜயா, லதா என்ற பெரியார் செல்வி, மகன் ரவிச்சந்திரன் மற்றும் குடும்பத்தி னருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவருக்கு நமது வீர வணக்கம்!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

17.2.2021

குறிப்பு: இன்று பகல் 2 மணியளவில் அவரது இறுதி நிகழ்ச்சி இராயபுரத்தில் நடைபெறுகிறது.

Comments