பள்ளிகளை உடனடியாகத் திறக்க உலக நாடுகளுக்கு கோரிக்கை

கோவிட் 19 தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகளை உடனடியாக திறக்கவேண்டும் என்று  அய்.நா. சிறுவர் நிதியகம்  உலக நாடு களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. 

பள்ளிகள் திறப்பது தொடர்பாக யுஎன் 'குளிரி ஃப் '  நிர்வாகத்தலைவர் என்ரிடா போர் கூறும் பொழுதுகடந்த ஆண்டு மார்ச் முதல் ஜனவரி 12வரை பல நாடுகளில் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

கரோனா பரவல் காரணமாக இந்த  மூடல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.  பள்ளி மூடல் தொடர்பாக கரோனா பவரலைத் தடுக்கும் வழிமுறை என்ற  காரணத்தை அந்தந்த நாட்டு அரசுகள் கூறியுள்ளன.

கோவிட் 19 தொற்று  தற்பொழுது இரண்டாம் ஆண்டை தொட்டுவிட்டது. இப்போதும்  உல கெங்கிலும் ஆங்காங்கே பரவிக்கொண்டு இருக்கிறது.  இருப்பினும் பல நாடுகளில் பரவல் குறைந்து கொண்டிருக்கிறது.  எனவே மூடப்பட்ட பள்ளிகளை தற்பொழுது மெல்ல மெல்ல சில நாடுகள் திறந்து கொண்டிருக்கிறன.

அனைத்து நாடுகளும்  பள்ளிகளைத் திறப்பது தற்பொழுது முக்கியமான ஒன்றாகும்   நீண்ட காலமாகப் பள்ளிகள் செயல்படாமல் இருப்பது குழந்தைகளின் கல்வி கற்கும் ஆர் வத்தைத்  தணித்து விடும்.

இதுதொடர்பாக 90 சதவீத பள்ளி மாணவர் கள் தங்களின் கல்வித் திறனை மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். சமீபத்தில் நடத்திய ஆய் வின் மூலம் இது தெரிய வந்துள்ளது. மூன்றில் ஒரு பங்கு மாணவர்களுக்கே தற்போது  இணைய வழி மற்றும் இதேவகையில்  கல்வி கிடைக்கிறது. 90 சதவீதம் மாணவர்கள் கல்வி எதுவும் இன்றி இருக்கின்றனர்.

 இவர்களுக்கு கல்வி இழப்பு  பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் குழந்தைகள் கற்கவும் எழுதவும்  நேரடி வகுப்புகள் மிகவும் அவசியமாகி உள்ளது. 21-ஆம்  நூற்றாண்டில் பொருளாதார வளர்ச்சி குழந்தை கல்வியை மய்யமாகக் கொண்டே இருக்கிறது

பள்ளிகளில் கிடைக்கும் மதிய உணவு இதர ஊட்டச்சத்துப் பொருட்கள் பல ஏழை நாடுகளின் குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது  பள்ளிகள் மூடப்படும் பொழுது  கோடிக்கணக் கான குழந்தைகள் பட்டினியால் மரணிக்கும் சூழல் உருவாகிறது. இதன் மூலம் குழந்தைகள் உடல் நலம், மன நலம் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி  கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

மேலும் கல்வி குழந்தைகளின் மிகவும் முக் கியமான ஒரு முதலீடாகும். பள்ளிகள் மூடப்படும் பொழுது கல்வியின் மீதான ஆர்வம் குறையும். ஆனால் மீண்டும் அவற்றை மீட்டு எடுப்பது மிகவும் கடுமையான ஒன்று ஆகும்.  ஆகவே உலக நாடுகள் அனைத்தும் உடனே பள்ளிகளைத் தகுந்த பாதுகாப்போடு திறக்க வேண்டும் என்று என்று சிறுவர் நிதியகம் கோரிக்கை விடுத்து உள்ளதுஎன்று என்ரிடா போர் கூறினார்.

Comments