குறையாத கரோனா பாதிப்பு சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

சென்னை, பிப். 22- உருமாறிய கரோனாவை தடுக்க தமிழ கத்தில் தீவிரமாக கண்காணிக் கப்படுகிறது என்று சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:-

கரோனா வைரஸ் இங் கிலாந்து உட்பட பல நாடு களில் உருமாறிஉள்ளது. இந் தியாவிலும் இது உருமாறி உள்ளதாக தகவல் வருகிறது. கரோனா மட்டுமல்ல எந்த வைரசாக இருந்தாலும் உரு மாறுவது வழக்கம்தான். ஆர்.என்.அய்.நுண் கிருமிகள் மாதம் இரண்டு முறை உரு மாறும். ஆனால் இந்தியாவில் உருமாறுவதாக ஆராய்ச்சியா ளர்கள் சொல்கிறார்களே தவிர அதற்கான புதிய சிகிச்சை மாற்றத்தை யாரும் அறிவிக்கவில்லை. பொது வாக வைரசிடம் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் முகக் கவசம் அணிவது தான் சிறந்த தடுப்பு நடவடிக்கையாகும். தமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறை யாமல் சற்று  அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த 2 வாரமாக இந்த எண்ணிக்கை குறையா மல் நீடித்து வருவது ஆபத் தான சூழ்நிலையாகும்.

சென்னையில் ஒரு சிலர் முகக்கவசம் அணிகின்றனர். ஆனால் தென்மாவட்டங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் முககவசம் அணிவதை விட்டு விட்டனர். பொது நிகழ்ச்சி களில் பங்கேற்பவர்கள் கூட முகக் கவசம் அணியாமல் செல்வது தற்போது அதிக ரித்து வருகிறது. கரோனா இனி நமக்கு வராது என்ற நினைப்பில் பலர் கவனக் குறைவாக உள்ளனர். அது தவறு. தற்போது தேர்தல் காலமாக உள்ளதால் பல நிகழ்ச்சிகள் கூட்டம், கூட்ட மாக நடத்தப்படுகிறது. யாருமே முகக்கவசம் அணிவது இல்லை. செண்டை மேளம் அடிப்பவர்கள், நிகழ்ச்சிக்கு வந்து செல்பவர் கள் பலர் முகக்கவசம் அணி யாமல் உள்ளதால் மீண்டும் கரோனா அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண் டும்.

உருமாறிய கரோனா தமி ழகத்தில் உள்ளதா, இல் லையா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும் இதை தடுப்பதற் காக கண்காணிப்பு தீவிர மாக்கப்பட்டுள்ளது. வெளி நாடுகளில் இருந்து வருபவர் கள், மராட்டியம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments