இராயபுரம் கோபால் மகன் கோ.பிரபாகரன் - பிரியங்கா மணவிழா

தமிழர் தலைவர் ஆசிரியர் காணொலியில் வாழ்த்துரை-மணவிழாவினை கழகத் துணைத் தலைவர் நடத்தி வைத்தார்

மன்னார்குடி, பிப். 17- திராவிடர் கழக விவசாய தொழிலாளரணி மாநில செயலாளர் இராயபுரம் இரா.கோபால் -வளர்மதி ஆகியோ ரின் மகன் கோ.பிரபாகரன் - மயி லாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் குமிளங்காடு கோ.பரம சிவம் -ஜோதிலட்சுமி ஆகியோரது மகள் பிரியங்கா இவர்களுக்கு 8.2.2021 அன்று காலை 9.30 மணி யளவில் மன்னார்குடி பி.பி.மகா லில் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா நடைபெற்றது.

மன்னார்குடி மாவட்ட திரா விடர் கழக தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் தலைவரை முன்மொழிந்து உரை யாற்றினார். தஞ்சை மண்டல திரா விடர் கழக தலைவர் அய்யனார் வழிமொழிந்து உரையாற்றினார். கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அறிமுகவுரையாற்றினார்.

காணொலியில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்கள் சென்னையிலி ருந்து காணொலியில் வாழ்த்துரை யாற்றினார். இராயபுரம் கோபால் குடும்பம் எப்படி இயக்கம் சார்ந்த குடும்பம் என்பதை விளக்கி வாழ் வியல் உரையாக தமிழர் தலைவர் ஆசிரியர் நிகழ்த்தினார்கள்.

தொடர்ந்து கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்கன்றன் அவர்கள் மணமக்களுக்கு உறுதி மொழி கூறி மண விழாவினை நடத்தி வைத்து வாழ்த்துரையாற்றி னார்கள்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் இராஜமாணிக்கம் புத்தூர் திமுக பொறுப்பாளர் பாண்டியன், திராவிடர் கழக காப்பாளர் இரா ஜகிரி கோ.தங்கராசு ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்கள். இறுதியாக மணமகன் தந்தையார் இராயபுரம் இரா.கோபால் நன்றி கூறினார்.

இதழுக்கு சந்தா ரூ. 10,000 அளிப்பு

மணமக்கள் கோ.பிரபாகரன் - .பிரியங்கா சார்பாக 'திராவிடப் பொழில்' பன்னாட்டு இதழுக்கு சந்தா தொகை ரூ. 10,000 கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்களிடம் வழங்கினார்.

நிகழ்வில் திருவாரூர் மண்டல செயலாளர் .பொன்முடி, மன் னார்குடி மாவட்ட செயலாளர் கோ.கணேசன், திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன், திருவாரூர் மாவட்ட செயலாளர் வீர.கோவிந்த ராசு, மாவட்ட துணைத் தலைவர் அருண்காந்தி, நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி..நெப்போலி யன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, தஞ்சை மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங், மாவட்டச் செயலாளர் .அருணகிரி, திருவாரூர் மண்டல மகளிரணி செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், திருத்துறைப் பூண்டி மாவட்டத் தலைவர் கி. முருகையன், மாவட்டச் செயலா ளர் கிருஷ்ணமூர்த்தி, பட்டுக் கோட்டை கழக மாவட்டத் தலைவர் பெ.வீரையன், மாவட்டச் செயலாளர் வை.சிதம்பரம், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், திரு வாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே.கலைவாணன், தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பூண்டி து.கிருஷ்ணசாமி வாண்டையார், திராவிடர் கழக கிராம பிரச்சாரக்குழு அமைப் பாளர் முனைவர் அதிரடி .அன் பழகன், கழக பேச்சாளர்கள் இராம. அன்பழகன், இரா.பெரியார் செல் வன், மன்னை மாவட்ட அமைப் பாளர் ஆர்.எஸ்.அன்பழகன், பொதுக் குழு உறுப்பினர் சிவஞானம், மாவட்ட துணைச் செயலாளர் வீ.புட்பநாதன், மன்னார்குடி சட் டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட மாநில மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக் கழக பொறுப்பாளர்கள், நண்பர் கள், உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இராயபுரம் கோ.வெங்கடாசலம் - மலர்மங்கை, தமிழரசி ஜெயபாலன், சாந்தி மூர்த்தி, இரா.கரிகாலன் அங்கையர்க்கண்ணி, கோ.பரம சிவம், ஜோதிலட்சுமி உள்ளிட்ட உறவினர்கள் மணவிழா ஏற்பாடு களை செய்து உபசரித்தனர்.

Comments