ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·     விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக அரியானா மாநிலத்தின் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவின் ஜன்நாயக் ஜனதாக் கட்சி, ஆளும் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

·     ஜனநாயகத்தில் போராட்டங்கள் தவிர்க்கமுடியாதவை. தொடர் போராட்டங்கள் உலகத்தின் கவனத்தைப் பெறும். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வெளி நாட்டினர் மீது குற்றப்பத்திரிக்கை பதிவு செய்வது முதிர்ச்சியற்ற நிலைப்பாடாகும் என மூத்த எழுத்தாளர் பவன் கே.வர்மா குறிப்பிட்டுள்ளார்.

·     வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதிக்குள் வேளாண் சட்டங்களை மோடி அரசு ரத்து செய்ய வேண்டும். அதுவரை தங்கள் போராட்டம் தொடரும் என பாரதீய கிஷான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் எச்சரித்துள்ளார்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

·     தமிழகத்தின் பல பகுதிகளில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சாலை மறியல் நடைபெற்றது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மக்கள், வேலைவாய்ப்பற்ற வர்கள், சிறு, குறு தொழில் முனைவோர் குறித்து மோடி அரசின் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்ல என காங்கிரஸ் தலைவர் .சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

·     இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் சதித்திட்டத்தில் ரிஹானா, கிரெட்டா துன்பெர்க் மற்றும் பிற சர்வதேச பிரபலங்கள் காலிஸ்தானி குழுக்களுடன் கூட்டணியில் உள்ளனர் என்பதை நாம் நம்ப வேண்டும். இந்த கோட்பாடு சில பைத்தியக்கார, இந்துத்துவ விளிம்புக் குழுவால் பரப்பப்பட்டிருந்தால்,  நாம் அதுபற்றி கவலைப்பட மாட்டோம். கெட்டவாய்ப்பாக, இது இந்திய அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பாஜக செய்தித் தொடர்பாளர்களால் பரப்பப்படு கிறது என மூத்த பத்திரிக்கையாளர் தவ்லீன் சிங் தெரிவித்துள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவருமான தேஜஷ்வி யாதவ், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் ஒப்பந்த அடிப்படையில் கூட்டுச் செயலாளர் மற்றும் இயக்குநர் பதவிகளுக்கான நேரடிப் பணி நிய மனங்களை செய்திட மத்திய அரசு எடுத்த முடிவுஅரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் தீங்கானது  என்று கூறியுள்ளார்.

தி டெலிகிராப்:

·     இணைச் செயலாளர்கள் மற்றும் இயக்குநர்களின் 30 பதவிகளை ஒப்பந்தத்தில் நியமிக்க மத்திய அரசு விளம்பரம் செய்துள்ளது, இரண்டு ஆண்டுகளில் இதுபோன்ற இரண்டாவது நிகழ்வு. சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டைத் தவிர்ப்பதற்கான சூழ்ச்சி என அம்பேத்கரிய அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

·     அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் காங்கிரஸ் கூட்டமைப்பின்  தலைவர்கள் நரேந்திர மோடி அரசாங்கத்தை ஜனநாயகத்தின் விதிமுறைகள் பேணப்படுவதையும்  எதிர்ப்பாளர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்யவும் மற்றும் இணைய அனுமதி அளித்திடவும் உறுதி செய்திடுமாறு வலியுறுத்தியுள்ளனர்,

·     டில்லிக்கு அருகிலுள்ள ஒரு தொழில்துறை வளாகத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியம் முறையாக அளிக்காத நிறுவனங் களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு இளம் இந்தியப் பெண் மற்றும் தொழிற்சங்கவாதியான நோதிப் கவுரை அரசு கைது செய்து அடித்து துன்புறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து  அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸின் சகோதரியின் மகள் அமெரிக்க ஆர்வலர் மீனாட்சிமீனாஹாரிஸின் ட்வீட் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

- குடந்தை கருணா

7.2.2021

Comments