வேளாண் சட்டங்கள் மாற்ற முடியாத மதநூல்கள் அல்ல! : பரூக் அப்துல்லா

புதுடில்லி. பிப்.11  வேளாண் சட்டங்கள் மாற்ற முடியாத மதநூல்கள் அல்ல. பாஜக வும் எதிர்க்கட்சி வரிசையில் ஒருநாள் அமரும் என்பதை நினைவில் கொள்ள வேண் டும் என காஷ்மீர் மாநில எம்.பி.   ஃபரூக் அப்துல்லா மாநிலங்களவையில் கூறினார்.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகளின் போராட் டம் 78ஆவது நாளாக தொடர்கிறது. இந்த நிலை யில், நடைபெற்று வரும் நாடாளுமன்ற நிதி நிலை அறிக்கை கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பேசி வருகின்றனர்.

இந்த நிலையில், குடிய ரசுத் தலைவர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது மாநிலங் களவையில் தேசிய மாநாட் டுக் கட்சியின் தலைவரும், காஷ்மீர் மாநில எம்.பி.யு மான  ஃபரூக் அப்துல்லா பேசும்போது,  விவசாயிகள் பிரச்சினையில் நான் உங்க ளுக்கு வைக்கும் கோரிக்கை என்பது என்னவென்றால், நாம்தான் வேளாண் சட்டங் களை இயற்றி இருக்கிறோம். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட் டங்களில் திருத்தம் செய்யக் கூடாது என்பதற்கு அவை ஒன்றும் மதம் சார்ந்த வேத நூல்களோ புனித நூல் களோ அல்ல. இந்த விவகா ரத்தில் விவசாயிகளுடன் பேசி ஒரு தீர்வுக்கு மத்திய அரசு வர வேண்டும். எதிர்க் கட்சி வரிசையில் பாஜகவும் ஒருநாள் அமரும் என்பதை நினைவில் கொள்ள வேண் டும்.

மேலும்,  நான் இரு கரம் கூப்பி உங்களிடம் கேட் கிறேன். விவசாயிகள் பிரச் சினையில் கவுரவம் பார்க்கா தீர்கள். இது நம்முடைய தேசம். இந்த தேசத்தை நாம் அனைவரும் சார்ந்தவர்கள். இந்த தேசத்தை நாம் சார்ந் தவர்களாக இருந்தால், நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். விரைவில் தீர்வோடு வாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 

Comments