பெரியார் பெருந்தொண்டர் இ.கண்ணனின் பிறந்த நாள் "திராவிடப் பொழில்" இதழுக்கு ரூ.800 வழங்கல்

கோவை, பிப். 19- 17.2.2021 மதியம் 2.மணி அளவில் கோவை முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரும், பகுத்தறிவு இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளருமான .கண் ணன் அவர்களின் 83ஆம் ஆண்டு பிறந்த நாளை முன் னிட்டு கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் புதிய கருப்புச் சட்டை மற்றும் வெள்ளை வேட்டி பரிசாக வழங்கப்பட்டது.

நிகழ்வில் மண்டல செய லாளர் .சிற்றரசு, மாநில மாண வர் கழக துணை செயலாளர் இராசி. பிரபாகரன், மண்டல மாணவர் கழகச் செயலாளர் மு.ராகுல், மாவட்ட மாணவர் கழகம் கவுதமன் மற்றும் தமிழ் முரசு, ஆட்டோ சக்தி, .மு. ராஜா ஆகியோர் நேரில் சந் தித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். தனது பிறந்தநாளை முன்னிட்டு திராவிடப் பொழில் இத ழுக்கு ஓராண்டு சந்தா ரூ 800, வழங்கினர்.

வரும் ஞாயிறு 21.2.2021 அன்று  திராவிடம் வெல்லும் என்ற தலைப்பில் கோவை அண்ணாமலை அரங்கில் கோவை மண்டல மாணவர் கழக கருத்தரங்கம் நடைபெறு வதை முன்னிட்டு தனது பங் களிப்பாக 5000 ரூபாய் நன் கொடை வழங்க இசைவு தந்து மாணவர் கழகம் சிறப் பாக செயல்பட தனது வாழ்த் துகளை தெரிவித்துக் கொண் டார்.

திராவிடம் வெல்லும் என்ற தலைப்பில் மாணவர் கழக கருத்தரங்கம் நிகழ்வு குறித்து  துண்டறிக்கை வழங்கிய போது, நிகழ்வு சிறக்க வழக்குரைஞர் கலை யரசன் தனது பங்களிப்பாக ரூ.3000 நன்கொடை வழங்க இசைவு தந்துள்ளார்.

Comments