தமிழக அமைச்சரவை பரிந்துரைத்த 7 பேர் விடுதலை: ஆளுநர் நிராகரிப்பு

சென்னை, பிப். 5- பேரறிவா ளன் உட்பட ஏழு பேரை விடு தலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை யின் பரிந்துரையை கடந்த மாதம் 25ஆம் தேதி நிராக ரித்து, தமிழக ஆளுநர் பன் வாரிலால் புரோகித் உத்தர விட்டுள்ளார்.

மேலும், விடுதலை செய்ய குடியரசுத் தலைவருக்குத் தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றத் தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக் கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந் தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர் களை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக ஆளுநர் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலி சிட்டர் துஷார் மேத்தா நேற்று (4.2.2021) உச்ச நீதி மன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள் ளார். அதில், “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட் பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்த முழு அதி காரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது. மாநில ஆளுநர் என்ற முறையில் நான் தலையிட  அதிகாரம் கிடையாது. இதில் ஒரு நாட் டின் பிரதமர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் எப்படி விடு தலை என்ற முடிவை நான் எடுக்க முடியும் என்பது புரியவில்லை. அதனால் ஏழு பேர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவை தீர்மானம் மற்றும் பேரறிவாளன் கருணை மனு ஆகியவற்றை தனது மூல மாக (கடந்த 25ஆம் தேதி) நிராகரிக்கப்படுகிறது. இதுகுறித்து வேண்டுமானால் குடியரசுத் தலைவரிடம் முறையிடலாம் என குறிப்பிடப் பட்டுள்ளது.

Comments