அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்தவேண்டும்: ஆதித் தமிழர் பேரவை மாநாட்டில் தீர்மானம்

திருப்பூர், பிப். 10- அருந்ததியர் களுக்கான உள் இட ஒதுக் கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும்  என்றுஆதித் தமி ழர் பேரவை  மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.

தனித் தொகுதியில் அருந் ததியர்களுக்கான சமூக நீதியை வலியுறுத்தும் வகை யில்  ஆதித் தமிழர்  பேரவை யின் திருப்பூர் கிழக்கு மாவட் டம் சார்பாக "தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதி மாநாடு" கடந்த 7.2.2021 அன்று மாலை 6 மணியளவில் தாராபுரம் ருக்மணி மகாலில் துவங்கி நடைபெற்றது. மாநாட்டில் ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் இரா.அதியமான் பங்கேற்று நிறை வுரை ஆற்றினார்.

தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும் அஇஅதிமுக வை புறக்கணிப் பது! திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களை முதல்வர் பொறுப்பில் அமர்த் திட வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தீவிர பிரச் சாரங்களை மேற்கொள்வது! அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்! தனித் தொகுதிகளில் அருந்த தியர்களுக்கான சமூகநீதியை வழங்கிட  அனைத்து அரசி யல் கட்சிகளையும் வலியுறுத் துவது! விவசாயிகளுக்கு எதி ரான சட்டங்களை நிறை வேற்றியும், டில்லியில் போராடி வரும் விவசாயிகளின் மீது தாக்குதல் நடவடிக்கையை கையாண்ட  மத்திய அரசை வன்மையாக  கண்டிப்பது! தண்டனைக் காலம் முடிந்த பின்னும் சிறையில் வாடும் ஏழு தமிழர்களை உடனடி யாக விடுதலை செய்ய வேண் டும்! தாராபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் "சட்ட மேதை" டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் முழு உருவ வெண் கல சிலை அரசு சார்பில் நிறுவப்பட வேண்டும்! தாரா புரத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்பட வேண்டும்! தாராபுரம் பகுதியில் ஆயி ரக்கணக்கான தொழிலாளர் களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வந்த அரசு கூட்டுறவு பஞ்சாலையை மீண்டும் செயல்படுத்த வேண்டும்! தாராபுரம் நகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ள தூய்மை பணியாளர் களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்! தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்புகள் வழங்கிட வேண்டும்! தாராபுரம் அரசு மருத்துவமனையை நவீனப் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் ஆதித்தமிழர் பேரவையின் அனைத்து அணியினரும் திரளாக பங் கேற்றனர்.

Comments