தேசத் துரோக வழக்கு: சசி தரூர், 6 பத்திரிகையாளர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை

புதுடில்லி, பிப். 10-  தேசத் துரோக வழக்கில் சசி தரூர், 6 பத்திரிகையா ளர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலி யுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டில்லியில் கடந்த 2 மாதங் களுக்கும் மேலாக போராடி வரு கின்றனர். இதில் ஈடுபட்டிருந்த சுமார் 41 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் 11 சுற்று பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு நடத்தியது. ஆனால் அவை பலனளிக்காததால் போராட்டம் நீடித்து வருகிறது.

இந்தப் போராட்டத்தை தீவிரப் படுத்தும் நோக்கில் விவசாயிகள் குடி யரசு தினத்தன்று டில்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தினர். நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1 லட்சம் டிராக்டர்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் பேரணியாக டில்லிக்குள் நுழைந்தனர். அப்போது காவல்துறை யினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை யாக உருவெடுத்தது. விவசாயிகள், காவல்துறையினர் தரப்பில் பலர் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து காவல்துறை யினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விவசா யிகளை அடித்து விரட்டினர். இதன் பின்னர் விவசாயிகள் மீண்டும் தங் களது பழைய போராட்டக் களத்திற்குத் திரும்பினர்.

இந்நிலையில், விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறையில், விவசாயி ஒருவர் உயிரிழந்தது குறித்து வதந்திகளை வெளியிட்டதாக, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர், பத்திரிகையாளர் கள் மிருனல் பாண்டே, ராஜ்தீப் சர்தேசாய், வினோத் ஜோஸ், ஜாபர் ஆகா, பரேஷ் நாத், ஆனந்த் நாத் ஆகியோர் மீது உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு காவல்நிலையத்தில் தேசத் துரோகம், குற்றச் சதி மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பகைமையை ஊக் குவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யபட்டது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் களை கைது செய்வதற்கு உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image