69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்க்கும் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்

புதுடில்லி, பிப்.13 தமிழகத்தில் கல்வி நிலையங்கள், அரசு வேலை வாய்ப்புகள் ஆகியவற்றில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வகை செய்யும் சட்டத்திற்கு எதிராக தாக்கலான மனுவை பிற மாநில வழக்குகளுடன் சேர்க்காமல், தமி ழகம் தொடர்புடைய வழக்குகளு டன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய் துள்ளது.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகியோருக்குக் கல்வி, அரசுப் பணிகளில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் 1994-ஆம் ஆண்டில் ஒரு சட்டம் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், 2012-ஆம் ஆண்டில் சி.பி.காயத்ரி எனும் மாணவி சர்பில் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்தப் பிரதான வழக்கு நிலுவையில் இருந்து வரு கிறது. இந்த நிலையில், மனுதாரர் தரப்பில் உச்சநீதிமன்ற வழக்குரை ஞர் ஜி.சிவபாலமுருகன் கடந்த ஆண்டு இறுதியில் இடைக்கால மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீது தமிழக அரசு இரு வாரத் தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கீது அனுப்ப உத்தரவிட்டது.

இதனிடையே, சென்னையைச் சேர்ந்த தினேஷ் என்பவர் தரப்பி லும் இந்த 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன் றத்தில் இந்த ஆண்டின் தொடக் கத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டி ருந்தது. இந்த மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் கடந்த 2-ஆம் தேதி தமிழக அரசின் தரப்பில் வழக்குரைஞர் யோகேஷ் கன்னா ஒரு மனுவைத் தாக்கல் செய்துள் ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்ப தாவது: 69 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசின் 1994-ஆம் ஆண்டுச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை இதர மாநிலங்கள் தொடர் புடைய வழக்கு விசாரணையில் இருந்து பிரித்து, தமிழகம் தொடர் புடைய இதே கோரிக்கைகள் குறித்த ரிட் மனுக்களுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும்.

மேலும், மாநிலத்தில் உள்ள ஜாதிகள், இனங்கள், பழங்குடியினர் தொடர்புடைய தரவுகளை சேகரிப் பதற்காக உயர்நீதிமன்றத்தின் ஒய்வு பெற்ற நீதிபதி .குலசேகரன் தலைமையிலான ஓர் ஆணையத்தை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்த ஆணையம் மாநிலத்தில் உள்ள பழங்குடியினர், ஜாதிகளின் எண் ணிக்கையை அடையாளம் கண்டறி வதற்காக உரிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. இந்த ஆணையம் அதன் அறிக்கையை 6 மாதங் களுக்குள் அளிக்கவும் உள்ளது.

இதற்கு முன்பு தமிழகத்தில் 1969, 1983-ஆம் ஆண்டுகளில் ஆணை யங்கள் அமைக்கப்பட்டு ஜாதி வாரியாக சமூக பொருளாதார, கல்வி கணக்கெடுப்புகள் நடத்தப் பட்டன.

கடைசியாக 1983-ஆம் ஆண்டு இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அறிக்கை 1985-இல் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் மாநிலத்தில் பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், அட்டவணைப்பட்டியல் ஜாதி யினர், பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளது.

35 ஆண்டுகளுக்கு முன்பு கணக் கெடுப்பு நடத்தப்பட்டதால், தமிழக அரசு தற்போது ஜாதி புள்ளிவிவரத் தரவுகளை சேகரிக்க நீதிபதி .குலசேகரன் ஆணையத்தை அமைத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு வகுப்பினருக்கு சமத்துவ சமூக நீதியை அளிக்கும் வகையில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள் ளது. இந்தச் சட்டத்தின்படி பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீதம், பட்டி யலினத்தவர்களுக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் என இட ஒதுக்கீடு முறை வழங் கப்படுகிறது. அரசு வேலை, கல்வி யில் இடஒதுக்கீட்டை அமல்படுத்து வதில் தமிழகம் முன்னோடி மாநி லமாக உள்ளது. மேலும், மாநிலத் தில் இடஒதுக்கீட்டுக் கொள்கை 1921-இல் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. 19.7.1994-இல் இயற்றப்பட்ட இந்த 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டம், அரசமைப்புச்சட்டத்தின் பிரிவு 31-சி-இன் கீழ் குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்றுள் ளது. இது அரசமைப்புச்சட்டத்தின் 9-ஆவது அட்டவணைப் பட்டிய  லின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் அரசமைப் புச்சட்ட செல்லுபடித் தன்மையை எதிர்த்து உச்சநீதின்றத்தில் 1994, 1995, 96-ஆம் ஆண்டுகளில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை ஏதும் விதிக்கப்படவில்லை. தகுதியான மாணவர்களுக்கு 69 சதவீதத்திற்குப் பதிலாக 50 சதவீத அடிப்படையில் இடங்கள் அளிக்க மட்டும் மனுதாரர்களுக்கு இடைக் கால உத்தரவு வழங்கப்பட்டது. தமிழக அரசின் சட்டத்திற்கு 1994-இல் இருந்தே உச்சநீதிமன்றத்தில் தடை விதிக்கவில்லை. இந்தச் சட்டம் நடைமுறையில் இருந்து வருவதால் மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நீடித்த வளர்ச்சிக்கு வகை செய்து வருகிறது. இந்தரிட்மனுவை இதர மாநிலங்கள் தொடர்புடைய வழக்கு விசாரணையில் இருந்து பிரித்து, தமிழகம் தொடர்புடைய இதே கோரிக்கைகள் குறித்த ரிட் மனுக்களுடன் சேர்த்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments