அறிஞர் அண்ணா அவர்களின் 52ஆம் ஆண்டு நினைவு நாள்: நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை

தந்தை பெரியாரின் தள நாயகராகத் திகழ்ந்த அறிஞர் அண்ணா அவர்களின் 52ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2021) சென்னை கடற்கரைசாலையில் உள்ள அவரது நினைவிடத்தில்  காலை 11 மணியளவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்  பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் தே.செ. கோபால், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா. தாமோதரன், தாம்பரம் மாவட்ட தலைவர் . முத்தையன், செயலாளர் கோ. நாத்திகன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி. வீரபத்திரன், வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ. கணேசன், துணைத் தலைவர் கி. இராமலிங்கம், மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ. சுரேஷ், . கலைமணி, ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், ஆவடி முருகேஷ், பேராசிரியர் அய்ஸ்வரியா, முத்தழகு, மயிலை சோ. பாலு, சேத்பட் பாபு, . வெங்கடேசன் பகுத்தறிவாளர் கழகம், பெரம்பூர் தலைவர் பா. கோபாலகிருஷ்ணன், கொரட்டூர்  இரா. கோபால், தரமணி மஞ்சுநாதன், சண்முகப்பிரியன், சு.மோகன்ராஜ் தாம்பரம் நகர செயலாளர், குணசேகரன், ஊரப்பாக்கம் சீனிவாசன் மற்றும் கழகத் தோழர்கள் திரளாக பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

Comments