வேளாண் பணிகளுக்கான 5ஜி தொழில்நுட்ப வாகனங்கள்

சென்னை, பிப். 7- வேளாண் துறை மேம்பாட்டிற்கான வாகனங்களை தயாரித்து வரும் சோனாலிகா நிறுவனம், "விவசாயப் பணிகளில் சிக்கனமான நடைமுறைகளை அறிமுகம் செய்வதிலும் முன் னோடியாக விளங்கி வருகிறது. அவ்வகையில் உருளைக் கிழங்கு உற்பத்தி பணிகளில் பயன்படும் சிக்கந்தர் டீலக்ஸ் (Sikander DLX Potato Special Edition Series) என்ற சிறப்பு வகை டிராக்டர் ஒன்றை கடந்த மாதம் இது அறிமுகம் செய்துள்ளது. முன்னேறிய மாடலான இந்த டிராக்டரில் 5ஜி தொழில்நுட்பத்தில் கட்டுப்படுத்தப்படும் வால்வுகள் இடம் பெற்றுள்ளதோடு, இது உருளைக் கிழங்கு விவ சாயத்தில் தேவைப்படும் நுட்பமாகத் தண்ணீர் பாய்ச்சும் பண்பு களையும் பெற்றுள்ளது.

இது குறித்து பேசிய இந்நிறுவனத்தின் செயல் இயக்குனர் ரமன் மிட்டல், “விவசாயப் பணிகளில் இயந்திரப் பயன்பாட்டை அதிகரிக் கும் அதே வேளையில், அதற்காக விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய முதலீடுகள் நடைமுறைச் செலவுகள் அதிகரிக்காமல், அவர்களுக்கு கிடைக்கக் கூடிய பலன்கள் மற்றும் அவர்களது ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் வகையில் அமைய வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். கரோனா பெருந் தொற்று காலத்திலும் கூட, தொடர்ந்து வளர்ச்சி கண்டுவந்ததால், நடப்பாண்டு ஜனவரியில் நாங்கள் 10,158 டிராக்டர்களை விற்பனை செய்ய முடிந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தொழில் முனைவோர்களுக்கான நிதி சேவை

மதுரை. பிப். 7- இந்தியாவின் மிகப்பெரிய வங்கிசாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான அய்அய்எப்எல் (IIFL), சிறு, குறு தொழில் முனைவோர்கள் மற்றும் வணிகர்களுக்காக ஒரு சிறப்பு திட்டமாக தங்க கடன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 2021ஆம் புத்தாண்டில் இந்நிறுவனம் அதன் வாடிக்கையாளர் தளம் மற்றும் வணிகம் கணிசமாக வளர்ந்து வருவதையும் குறைந்த செலவில் மற்றும் மறைக்கப்பட்ட கட்டணங்கள் இன்றி கடன்களை வழங்குவ தையும் கண்டிருக்கிறது என இந்நிறுவனத்தின் தமிழ்நாட்டு மண்ட லத் தலைவர் சிறீகாந்த் ரெமலா தெரிவித்துள்ளார்.

புத்தாக்கமான தொழில்நுட்பத்தில் வாகனங்கள் அறிமுகம்

சென்னை, பிப். 7- புத்தாக்கமான தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மிகுந்த செயல்திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டு வாகன (SUV)த்தை ஜீப்காம்பஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனம் அதி நவீன தொகுப்பில் வாடிக்கையாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட புதிய அம்சங்களுடன் நாங்கள் வடிவமைத்துள்ளோம். செயல்பாட்டுத் திறன்களுடன் முற் றிலும் புதிய உட்புறத்தைக் கொண்டுள்ளது என எப்.சி..நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பார்த்தா தத்தா தெரிவித்துள்ளார்.

Comments