கடந்த 5 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 340 தொழிலாளர் உயிரிழப்பு

புதுடில்லி, பிப். 5- கடந்த 5 ஆண் டுகளில் கழிவுநீர் தொட்டி யில் இறங்கி சுத்தப்படுத்திய 340 தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்துள்ள தாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

மகாராட்டிரா மாநிலத் தைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் அளித்த பதிலில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. அவர் அளித்த பதிலில், கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வரை 5 ஆண்டு களில் 19 மாநிலங்கள் மற் றும் யூனியன் பிரதேசங்களில் கழிவுநீர் கால்வாய்கள் மற் றும் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்த போது, 340 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிக பட்ச மாக 52 பேரும்அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 43 பேர் பலியாகியிருப்ப தாகவும் தெரிவிக்கப்பட்டுள் ளது. இதனைத் தொடர்ந்து டில்லி, மகாராட்டிரா, அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் பலியாகியிருப்பது  மத்திய அரசின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

இதற்கு, கழிவுநீரை அகற்ற போதிய அளவில் இயந்திரங் களின் பயன்பாட்டை அரசு நடைமுறைக்கு கொண்டு வராததே காரணம்  என்று தொழிலாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் குற் றம்சாட்டுகின்றனர்.

Comments