40 லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றம் முற்றுகை

புதுடில்லி, பிப். 24- வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் 40 லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்துவோம் என வேளாண் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் எச்சரிக்கை விடுத்துள்ளார்இந்த மூன்று சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். அதேபோல குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால், நாட்டில் பெரிய நிறுவனங்களுக்குச் சொந்தமான சேமிப்பு கிடங்குகளை விவசாயிகள் தாக்க வேண்டியிருக்கும். இந்தப் போராட்டத்திற்கான தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.


Comments