இலங்கை கடற்படையினரால் 4 தமிழக மீனவர்கள் கொலை: உள்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, பிப். 7-- இலங்கைக் கடற்படையினரால் சமீபத் தில் கொலை செய்யப்பட்ட நான்கு இந்திய மீனவர்களுக்கு  இலங்கை அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும். கொலை செய்த இலங்கைக் கடற்படையினரை கைது செய்யக் கோரிய வழக்கில் மத்திய உள்துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத் தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ்  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை யில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சட்டவிரோதமாக கைது செய்வது, கொலை செய்வது, படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவது, துப்பாக்கி முனையில் தமிழக மீனவர்களை கடத்துவது, சட்டவிரோதமாக சிறையில் அடைப்பது போன்ற  செயல் களைச் செய்து வருகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில் 1,500 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையின ரால் கொல்லப்பட்டுள்ளனர்.

2021 ஜனவரி 18ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக  கடலுக் குச் சென்ற மெசியா, நாகராஜ், செந்தில் குமரன், சாம்சந்தவின் ஆகிய நான்கு பேரையும் இலங்கைக் கடற்படையினர் கைது செய்து துன்புறுத்தி கொலை செய்து கடலில் வீசி யுள்ளனர். கொலை செய்யப் பட்ட நான்கு மீனவர்களுக்கு இலங்கை அரசு உரிய நிவா ரணம் வழங்க வேண்டும். கொலை செய்த இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த நபர் களை கைது செய்ய வேண்டும். இந்திய மீனவர்களையும் அவர் களது உடைமைகளையும் காப்பாற்றுவதற்கு முறை யான வழிகாட்டுதல்களை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண் டும்எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அமர்வு முன்பு 5.1.2021 அன்று விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்து மத்திய உள்துறை செயலர் பதிலளிக்க உத்தர விட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments