கடந்த 4 ஆண்டுகளில் கல்வியறிவு பெறாத 1 லட்சம் பேர் எழுத்தறிவு பெற்றனர்: கேரள அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம், பிப். 22- கேரள மாநிலத்தில் கடந்த 4 ஆண்டு களில் கல்வி அறிவு பெறாத ஒரு லட்சம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது.

கேரள அரசின் அதிகார பூர்வ புள்ளிவிவரங்கள்படி, 2011-ஆம் ஆண்டு கணக்கின் படி மாநிலத்தில் 18 லட்சம் பேர் கல்வியறிவு இல்லாத வர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு கல்வியறிவு போதிக்கும் பணி மாநில அரசு சார்பில் நடைபெற்று வருகிறது. அதற்காக உருவாக் கப்பட்ட கேரள எழுத்தறிவு ஆணையத்தின் திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள விழிப்புநிலை மக்கள், மீனவ மக்கள், கிராமப்புற மக்கள்,   பழங்குடியின மக்கள் தவிர்த்து, புலம்பெயர்ந்து கேரளாவுக்கு வந்த தொழி லாளர் கள் ஆகியோருக்கும் எழுத்தறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பலர் தங்கள் கல்வியைப் பாதியிலேயே நிறுத்தியிருந்த னர், அவர்களும் கல்வியைத் தொடரவும் வாய்ப்பும், வசதி யும் வழங்கப்பட்டது.

கேரள அரசின் மாநிலக் கல்வித்துறையின் கீழ் செயல் படும் சுயேட்சை அமைப்பான கேரள எழுத்தறிவு இயக்க ஆணையம்  (கேஎஸ்எல்எம்ஏ) பல்வேறு எழுத்தறிவு திட்டங் களை மாநிலத்தில் செயல் படுத்தி வருகிறது.

அதன்படி, மாநிலம் முழு வதும் கடந்த 4 ஆண்டுகளில், பெண்கள் உள்பட 1லட்சத்து 35 ஆயிரத்து 608 பேர் கல் வியறிவு பெற்றுள்ளதாக அறி விக்கப்பட்டு உள்ளது.

4ஆ-ம் வகுப்பு வரை 24,148 பேரும், 7ஆ-ம் வகுப்புவரை 21,950 பேரும், 10ஆம் வகுப்பு வரை 64,663 பேரும், 12-ஆம் வகுப்பு வரை 24,847 பேரும் கல்வி கற்றுள்ளனர்.

கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டுவரை காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய ஜனநாயக முன்னணி அரசு ஆட்சியில் மொத்தமாக 4 ஆயிரத்து 600 பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்தனர்.

ஆனால், அய்க்கிய இடது ஜனநாயக அரசின் கீழ் 1.38 லட்சம் பேர் புதிதாக எழுத் தறிவு பெற்றுள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளில், 2016 முதல் 2020ஆம் ஆண்டு வரை தான் பழங்குடி இனத் தைச் சேர்ந்த மக்கள் அதிக மாக கல்வியறிவு பெற்றுள்ள னர் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

Comments