திருவாரூர் மாவட்டம் திருநெய்ப்பேர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் வா .கோவிந்தராஜ் அவர்களது வாழ்விணையர் நாகரெத்தினம் அம்மையார் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நாள்

திருவாரூர் மாவட்டம் திருநெய்ப்பேர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்  வா .கோவிந்தராஜ் அவர்களது வாழ்விணையர்  நாகரெத்தினம் அம்மையார் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நாளை  (12-02-2021)  முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 5000/-க்கான நன்கொடை காசோலையாக வழங்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த 6 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 'வாழ்வியலில் திருக்குறள்' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.16,000 மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டது. நாகரெத்தினம் கல்வி அறக்கட்டளை தலைவர் கோவிந்தராஜ்  அவர்கள் முதல் பரிசினை வழங்குகினார். அருகில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்  மோகன்  மாவட்ட செயலாளர் வீர. கோவிந்தராஜ் மற்றும் மாவட்ட துனைத் தலைவர் அருண்காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Comments