தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் 3 ஆம் கட்டமாக தேர்தல் பிரச்சாரம் மக்களிடம் நேரில் கோரிக்கை மனு பெறுகிறார்

சென்னை,பிப்.10- திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் 3ஆம் கட்டமாக வருகிற 12ஆம் தேதி முதல் பிரச்சாரத்தில் ஈடுபடு கிறார். அப்போது மக்களிடம் நேரில் கோரிக்கை மனுக்களையும் அவர் பெறு கிறார்.

தமிழக சட்டசபை தேர்தலை எதிர்க் கொள்ளும் வகையில் திமுக தலைவர் மு..ஸ்டாலின் தனது அனல் பறக்கும் பிரசாரத்தை தொடங்கியிருக்கிறார். “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்என்ற பெயரில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து வருகிறார்.

இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு,

திமுக தலைவர் மு..ஸ்டாலின்உங்கள் தொகுதியில் ஸ்டாலின்என்ற பெயரில் 3ஆம் கட்ட சுற்றுப்பயண விவரம் மேற்கொள்கிறார். அதன்படி வருகிற 12 ஆம் தேதி காலை 8 மணி விழுப்புரம் மத்திய மாவட்டம் குப்பம் ஊராட்சி, காணை, விக்கிரவாண்டியிலும். மதியம் ஒரு மணி கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம் சார்பில் ராதாகிருஷ்ணன் நகர், திருச்சி நெடுஞ்சாலை, உளுந்தூர்பேட்டையிலும் பிரச் சாரத்தில் ஈடுபடுகிறார். 13ஆம் தேதி காலை 8 மணி கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில் கலைஞர் திடல். பெரியார் நகர், விருத் தாசலம் நெடுஞ்சாலை ராணி மகால் எதிரில், விருத்தாசலத்திலும். மதியம் ஒரு மணி கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் பை-பாஸ் சிதம்பரதிலும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

14 ஆம் தேதி காலை 8 மணி நாகை வடக்கு, தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் கலைஞர் அரங்கம் திருக்கடையூர் மெயின் ரோடு, பூம்புகாரிலும். மதியம் ஒரு மணி திருவாரூர், நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம் சார்பில் பிரதாபராமபுரம் ஊராட்சி, வேளாங்கண்ணி-வேதாரண்யம் சாலை, கீழையூர் ஒன்றியம், கீழ்வேளூ ரிலும். 15ஆம் தேதி காலை 8 மணி புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் சார்பில் ஊனையூர், திருமயத்திலும், மதியம் ஒரு மணி அரியலூர், பெரம்பலூர் மாவட்டம் சார்பில் கொல்லாபுரம், அரியலூரிலும் மு..ஸ்டா லின் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments