பொய்யுண்டார்கோட்டை, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும், தஞ்சை விடுதலை வாசகர் வட்ட தலைவருமான தங்க.வெற்றிவேந்தன் சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.35,000/-அய் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். (19.2.2021).
விடுதலை சந்தா அளிப்பு
தஞ்சை கீர்த்தனா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் செல்வராசு விடுதலையின் தொடர் வாசகர் ஆவார். விடுதலையின் வாசகர்களை விரிவாக்கும் நோக்கோடு தனது நண்பர்கள் இருவருக்கு சந்தாக்களுக்கான தொகை ரூ.3600/- மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ந.காமராசு மூலமாக கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன் (18.2.2021)
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைச் செயலாளர், கேரளபுரம் வி. முருகன்
கன்னியாகுமரி மாவட்ட கழக செயலாளர் கோ. வெற்றிவேந்தனிடம் விடுதலை நாளிதழுக்கு சந்தா வழங்கினார்.