தா(ழ்)ப்பாள் இல்லாத தா.பா.வின் நூல் இதோ! (2)

தந்தை பெரியார்

"தந்தை பெரியாரை பலமுறை பார்த்து இருந் தாலும், அவர் பேசுவதைக் கேட்டு இருந்தாலும், அவரை நேரில் சந்திக்கவும், சிறிது நேரம் உரையாடவும் 1960-க்குப் பின்னர்தான் சென் னையில் வாய்ப்புக் கிடைத்தது.

சென்னையிலுள்ள நடிகவேள் ராதா மன்றத் தில் ஒரு தொடர் சொற்பொழிவிற்கு திராவிடர் கழகச் செயலாளரும், ‘விடுதலை' ஆசிரியருமான கி. வீரமணி ஏற்பாடு செய்திருந்தார். அந்தத் தொடரில் நான் பேசுகிற நாள் ஒன்றின் போது, வேறு ஏதோ ஓர் ஊரில் நடைபெறும் நிகழ்ச் சிக்குப் போக வேண்டிய பெரியார் அந்த நிகழ்ச்சி ரத்து ஆனதால், சென்னைக்குத் திரும் பியவர் மேடையில் வந்து உட்கார்ந்துவிட்டார்.... அவர் மேடையில் இருந்ததால் சொற்களை அளந்தே பேசினேன். நான் பேசி முடித்தவுடன், தந்தை பெரியாரிடம் ஒலி வாங்கியை வைத்தனர். நான் பேசியது 45 மணித் துளிகள். அவர் ஒன் றரை மணி நேரம் பேசினார். என் பேச்சையும் பாராட்டியவர், சோவியத் யூனியனையும் புகழ்ந் தார். முடிக்கும் போது, "இந்தக் கம்யூனிஸ்டுகள் வளர்ந்து தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் வெற்றிபெற்று விட்டால், என்பாடு குறைந்து விடும். நாட்டு மக்கள் திருந்தினால்தானே அந்தக் கட்சி வெற்றி பெறும். எனவே தொடர்ந்து பாடு பட வேண்டியதுதான்" என்றார்.

அவரது பேச்சு, தன் குழந்தைகள் எதிர் பார்த்தபடி வளர்ந்து வெற்றி பெறவில்லையே என்ற குடும்பத் தலைவரின் உள்ளக் குமுறல் போல ஒலித்தது.

அவரைச் சந்தித்த ஒவ்வொரு நேரத்திலும் அவர் "அய்யங்கார் நலமா?" என்று கேட்பார். அவர் ஜீவா, ஏஎஸ்கே இருவரைப் பற்றித்தான் அடிக்கடி கேட்பார். அவர் மருத்துவமனை யிலிருந்த போதும் மோகன் குமாரமங்கலத்துடன் சென்று சந்தித்துள்ளேன்.

இதற்கு சில ஆண்டுகட்குப் பின்னர், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலக் குழு எடுத்த முடிவின்படி நான் வழக்குரைஞர் தொழிலைக் கைவிட்டு முழுநேர ஊழியராகப் பொறுப்பேற்றேன். அந்த முடிவுக்கு தோழர்கள் பூபேஷ் குப்தா, கல்யாணசுந்தரம், பாலதண்டாயு தம் ஆகியோரே முக்கிய காரணமாகும். அதைக் கைவிடுவதில் பல சிரமங்கள் இருந்தன. முடியாது இருந்த வழக்குக் கட்டுகளை என்ன செய்வது? குழந்தைகள், குடும்பம், படிப்பு எல்லாமே பிரச்சினைகள்தான். ஒரே நம்பிக்கை, ஆதாரம் மனைவி ஆசிரியையாக இருந்தது தான்.

இந்த முடிவை எடுத்த சில வாரங்கட்குப் பிறகு, பெரியார் திடலில் பேசப் போயிருந்தேன். பெரியார் அவரது அறையில் உட்கார்ந்திருந்தார். வீரமணி என்னை அழைத்துச் சென்று பெரியாரின் காதோரம் உரத்த குரலில், "இவர் வழக்குரைஞர் வேலையை விட்டுவிட்டு, முழுநேர ஊழியர் ஆகிவிட்டார்" என்றார்.

தந்தை பெரியார் தன் கையில் வைத்து இருந்த படிப்பதற்கான வட்டக் கண்ணாடியை மேலே தூக்கியபடி, என்னைத் திரும்பிப் பார்த் தார், முகத்தை உற்றுப் பார்த்தவாறு, "உன்னை நான் அறிவாளி என்றல்லலா நினைத்தேன்" என்றவர் மவுனமாகி விட்டார். இதுஅட முட்டாளே' என்பதைக் கவுரவமாகச் சொல்கிற பாணி,

சில நொடிகள் கழித்து, "அது என்ன முழுநேர ஊழியர்?" என்றார். அவர் விவரம் தெரியாமல் கேட்கவில்லை. வேண்டுமென்றேதான் கேட் டார். சில நொடிகள் கழித்து, "இந்தத் தமிழ்நாட்டில் முழு நேரமும் யார் கிழிக்கிறார்கள்? கொஞ்ச நேரம் பேசுவார்கள், கொஞ்ச நேரம் எழுது வார்கள். பிறகு அவரவர் வேலைக்குப் போய் விடுவார்கள்..." என்றவர், "அப்படி என்ன முழு நேரமும் வேலை செய்ய வேண்டி யிருக்கிறது?" என்றார்.

"சரி, உன் பிள்ளைகளை யார் படிக்க வைப்பது? நாளைக்கு ஒரு காய்ச்சல் என்றால், ஏது காசு?" இப்படி வரிசையாக அடுக்கியவர் "வழக்குரைஞராக இருந்து கொண்டே இதைச் செய்யலாமே!" என்றார்.

பின்னர் நான் நீண்ட விளக்கம் தந்தேன், எல்லாம் கேட்ட பிறகு, "சரி முடிவு எடுத்து விட்டாய். சிரமம்தான். குடும்பத்தையும் மறக்காதே, ஜீவானந்தம் மாதிரியே கத்தி உசிரை விடாதே'' என்றார்.

திரும்பும்போது அந்தப் பெரிய மனிதர் என் மீது இவ்வளவு பரிவு, அக்கறை காட்டியதை நினைத்து வியந்தேன். அவர்கேட்ட கேள்வி கட்கும் விடை தேட முயன்றேன். அவரது தோற்றம், அவரது பேச்சு, நெஞ்சில் பதிந்தவை."

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image