அக்டோபர் 2ஆம் தேதி வரை அவகாசம் மத்திய அரசுக்கு விவசாயிகள் கெடு

புதுடில்லி. பிப்.8 வேளாண் சட்டங் களை திரும்பப்பெற மத்திய அரசுக்கு அக்டோபர் 2ஆம் தேதி வரை கால அவ காசம் அளித்துள்ளதாக டில்லி எல் லைப்பகுதியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, தலைநகர் டில்லியில் 2 மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில், சக்கா ஜாம் என்ற பெயரில், நேற்று விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இந்த போராட் டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் யூனியன் சங்க நிர்வாகி ராகேஷ் திகைத், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசுக்கு, அக்டோபர் 2-ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.  மேலும் வரும் அக்டோபர்

2-ஆம் தேதிக்கு பின் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அனைத்து விவ சாயிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments