பெரியார் கேட்கும் கேள்வி! (253)

உள்ளது இரண்டு ஜாதிகளே; பார்ப்பனச் ஜாதி, சூத்திர ஜாதி என்பதுதான். நாயக்கர், நாயுடு, செட்டியார் என்றால் அதெல்லாம் ஒன்றுதான்; பட்டினி கிடப்பவர்கள் யார்? வேலை கிட்டாமல் திண்டாடுபவர்கள் யார்? இவர்க ளெல்லாம் ஒரு ஜாதி - அதாவது சூத்திர ஜாதி. மற்ற வனெல்லாம் - நெய் பருப்போடு சாப்பிடுகிறவனெல்லாம் பார்ப்பன ஜாதி. இவன் பாடுபட்டும் பிச்சையெடுக்கிறான்; அவன் பாடுபடாமல் உண்டு கொழுக்கிறான்! கேட்டால் நீ போன சென்மத்தில் செய்த வினை; அவனவன் தலை விதி என்று சொல்லி நம்மை ஏமாற்றுகிறான் - இல்லையா? என்ன அநியாயம்?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி, தொகுதி - 1

மணியோசை

Comments