பெரியார் கேட்கும் கேள்வி! (245)

பேசும் சக்தியோடும், கை, கால், கண், மூக்கு, வாய் களான பஞ்சேந்திரியங்களோடும் காணப்படும் மக்கள் யாவருமே மனிதர்கள்தான். இவர்களைக் கடவுள் என்றாலும், தேவர் என்றாலும், ராட்சதர் என்றாலும், மனிதர் என்றாலும், பேய் பிசாசு என்றாலும் மற்றும் வேறு எந்தப் பெயரால் அழைக்கப்பட்டாலும் இப்படிப்பட்ட எல்லோருமே மனிதர்கள்தான்; மனிதப் பிறவிதான்; மனிதச் சுபாவ குணம் உள்ளவர்கள்தான். இப்படிப்பட்ட இவர்களிடம் எந்தவிதப் பேதங்களும், உயர்வு தாழ்வு களும் கிடையாது. கண்டிப்பாய்க் கிடையாது. இருக்கிற தென்றால் அதற்கு வேத, சாத்திர, புராண, இதிகாச இலக்கி யங்கள், புலவர்கள், ஆச்சாரியார்கள் முதலியவர்களது கற்பனைப் புரட்டுக்களே காரணங்களாகும்! சிலர் கூறுவது போன்று, இப்புரட்டுகள் வாய்மை, மெய்மை, உண்மை, சத்தியம், தத்துவம் உள்ளவையாகுமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

Comments