பிப்.24 முதல் மார்ச் 9 வரை நடைபெறும் 44ஆவது புத்தக கண்காட்சி

பெரியார் புத்தக நிலைய அரங்கில் இயக்க வெளியீடுகள்

சென்னை, பிப். 20- தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் ('பபாசி') சார்பில் 44ஆவது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்எம் சிஏ மைதானத்தில் 24.2.2021 அன்று துவங்கி மார்ச் 9 வரை நடைபெறுகிறது.

தந்தைபெரியார், அன்னை மணியம் மையார், தமிழர் தலைவர் ஆசிரியர், அறிஞர் அண்ணா, கலைஞர், இனமா னப் பேராசிரியர், டாக்டர் நாவலர் உள்ளிட்ட தலைவர்கள் எழுதிய புத்த கங்கள் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் பெரியார் புத்தக நிலையம் சார்பில் திராவிடர் கழக, இயக்க வெளியீடுகளுக்கான அரங்குகள் சென்னை புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்படுகின்றன.

புத்தக கண்காட்சி குறித்து, பபாசி தலைவர் சண்முகம் மற்றும் துணைத் தலைவர்கள் கோ.ஒளிவண்ணன், நாக ராஜ் உள்ளிட்டோர் நேற்று (19.2.2021) அளித்த பேட்டி:

சென்னையின், 44ஆவது புத்தக கண்காட்சியை, நந்தனம், ஒய்.எம்.சி.., மைதானத்தில், 24ஆம் தேதி காலை, 10:00 மணிக்கு, துணை முதல்வர் பன்னீர் செல்வம் திறந்து வைக்கிறார்.

நிகழ்வில், முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் தலைமை ஏற்கிறார். அன்று மாலை, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார், சிறந்த பதிப்பாளர்களுக்கு சிறப்பு செய்கிறார். இந்தாண்டு முதல், புத்தக கண்காட்சி நடத்த, அரசு, 75 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளது.

தொடர்ந்து, தினமும் காலை, 11:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை புத்தக கண்காட்சி நடக்கும். இந்தாண்டு, 700 அரங்குகளில், ஆயிரக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வர உள்ளன. புத்தக கண்காட்சியில் அரங்கு அமைக்க இயலாதவர்களுக்கு உதவும் வகையில், 'ரேக்' என்ற திட்டம் தொடங்கப்படும்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், கிருமி நாசினி, முக கவசம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்படும். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், புத்தக கண்காட்சி அரங்குகளுக்கிடையிலான பாதைகள், 25 அடி அகலமுள்ள தாக அமைக்கப்படும். குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகை யில், கதை சொல்லல் நிகழ்வு நடை பெறும். பங்கேற்கும் குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்படும். வாசகர்களுக்கு வினாடி- வினா நிகழ்ச்சி நடத்தப்படும்.

உலக அறிவியல் தினமான பிப்.28ஆம் தேதியை சிறப்பிக்கும் வகையில், அனைத்து அரங்குகளிலும், அறிவியல் சார்ந்த நூல்கள் முன்னிலைப்படுத்தப் படும். உலக மகளிர் தினமான மார்ச், 8இல், அனைத்து அரங்குகளிலும், பெண் எழுத்தாளர்கள், வாசகர்களிடம் உரையாடி, வாங்கும் புத்தகத்தில் கையெ ழுத்திடுவர். அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும், மகளிரால் நடத்தப்படும். வெளி அரங்கில், நூல் வெளியீடுகள் தினமும் நடக்கும். நூலரங்குகளில், நூல் வெளியீடு, நூல் அறிமுக நிகழ்ச்சிகள் நடக்கும்.

இந்த புத்தக கண்காட்சிக்கு, 10 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு இலவச அனுமதி வழங் கப்படும். நுழைவு சீட்டுகள் குலுக்கப் பட்டு, நூல் பரிசுகள் வழங்கப்படும். ஓவிய கண்காட்சி அரங்கும் உண்டு.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Comments