மார்ச் 20 இல் குடந்தையில் பொதுக்குழுதமிழர் தலைவருக்கு மாவட்ட கழகம் நன்றி அறிவிப்பு

குடந்தை, பிப். 22- தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் விருப்பப்படி, எதிர்வரும் 20.3.2021 சனிக்கிழமை குடந்தையில் திராவிடர் கழகப் பொதுக்குழு மற்றும் அவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் ஆகியவற்றை எழுச் சியுடன் மாநாடுபோல் பிர மாண்டமாக நடத்திட பெரி யார் பெரும் தொண்டர்கள், மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகி களுடன் அலைபேசி வழி கலந்துரையாடல் மற்றும் ஆலோசனைகளுடன் பணி களை இன்றே துவங்கிவிட் டோம் என்பதை மகிழ்ச்சியு டனும், வணக்கத்துடனும் தெரிவித்துக் கொள்கிறோம். குடந்தை கழக மாவட்டத் திற்கு இப்பெரிய, அரிய வாய்ப் பினை வழங்கிய தமிழர் தலைவர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை  தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments