தமிழக சட்டமன்றத்தில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கை தாக்கல் பேச அனுமதி மறுப்பு - தி.மு.க. காங்கிரஸ், முஸ்லிம் லீக் வெளிநடப்பு

சென்னை, பிப்.23 - தமிழக சட்டமன்றத்தில் இன்று (23.2.2021) 2021-2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக பேச அனுமதி மறுத்ததால் தி.மு.. காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர்.

தமிழக சட்டமன்றத்தில் 2021-2022ஆம் ஆண்டுக் கான இடைக்கால  நிதி நிலை அறிக்கை தாக்கல் மற்றும் 2021-2022ஆம் ஆண்டின் செலவிற் கான முன்பண மானியக் கோரிக்கைகளை பேரவை முன் வைப்பதற்கான கூட்டம் இன்று (23.2.2021) காலை 11 மணியளவில் நடைபெற்றது.

சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும் சட்டப் பேரவைத் தலைவர் . தனபால் அவர்கள், 2021-2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை துணை முதலமைச்சர் . பன்னீர் செல்வம் பேரவைக்கு அளிப்பார் என அறிவித்தார்.

அனுமதி மறுப்பு - வெளிநடப்பு

இடைக்கால நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் அவர்கள்  பேரவைத் தலைவரை பார்த்து ஒரு சில கருத்துக்கள் சொல்ல அனுமதி கேட்டார் பேரவைத் தலைவர் அதற்கு மறுத்து பின்னர் பேச அனுமதிக்கிறேன் என்றார். தொடர்ந்து தி.மு.., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று பேச அனுமதிக்க வேண்டும் என ஒலி முழக்கமிட்டனர் அதற்கு அனுமதிக்காததால் இடைக்கால நிதி நிலை அறிக்கையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து துணை முதலமைச்சர் . பன்னீர் செல்வம் 108 பக்கங்கள் கொண்ட இடைக்கால நிதி நிலை அறிக்கையை பேரவைக்கு தாக்கல் செய்து உரையாற்றினார்.

துரைமுருகன் பேட்டி

இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் உரையை புறக்கணித்த திமுகவினர் தமிழக இடைக்கால பட் ஜெட் கூட்டத்தொடரை முழுமையாக புறக்கணிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த போது, திமுக ஆட்சி முடியும் போது தமிழகத்தின் கடன் 1 லட்சம் கோடியாக இருந்தது . தற்போது தமிழக அரசின் கடன் சுமை 5.7 லட்சம் கோடியாக அதிகரித் துள்ளது. அரசின் கடன் சுமையை உயர்த்தியதுதான் ஆட்சி நடத்தும் லட்சணமா? நிதி நிர்வாகத்தை நிர்மூலமாக்கியது தான் அதிமுக அரசின் சாதனை. தமிழகத்தின் வளர்ச்சியை அதிமுக அரசு 50 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்று விட்டது; தமிழகத்தை ஆட்சி செய்ய அதிமுகவுக்கு அருகதை இல்லை. அதிமுக ஆட்சிக்கு அழிக்கமுடியாத கரும் புள்ளியை இபிஎஸ் -ஓபிஎஸ் ஏற்படுத்தியுள்ளனர்.தமிழகத்தில் நிதி நிலைமை திமுக ஆட்சிக்கு வந்ததும் சீர்செய்யப்படும் என்றார்.

தமிழக இடைக்கால பட்ஜெட் 2021 - 22

சென்னைக்கு ரூ.3,140 கோடி நிதி

பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் (நகர்புறம்) -ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு

நெடுஞ்சாலைத்துறை - ரூ.18,750 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை மாநகரை தனித்தன்மை வாய்ந்ததாக மாற்றும் திட்டம் - ரூ.3,140 கோடி நிதி ஒதுக்கீடு

புதிதாக தொடங்கப்பட்ட மினி கிளினிக்களுக்காக ரூ.144 கோடி நிதி ஒதுக்கீடு

பெரும் பங்கை எடுத்துக் கொள்ளும் மத்திய அரசு

வரிவருவாயில் பெரும்பங்கை மத்திய அரசு எடுத்துக்கொள்வதாகவும், மாநிலங்களுக்கான பங்கை அளிப்பதில் காலம் தாழ்த்துவதாகவும் நிதி நிலை அறிக்கை உரையில் துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வம் குறிப்பிட்டுப் பேசினார். மேல் வரி (செஸ்) என்ற பெயரில் மத்திய அரசு விதிக்கும் வரிகள் கடந்த ஓராண்டில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன. இந்த வரியில் மாநில அரசுகளுக்கு பங்கு இல்லை. ஆனால், அடிப்படை தீர்வை வரிகளை மத்திய அரசு குறைத்துள்ளது (இதில் மாநிலங்களுக்கு பங்கு உண்டு). இதனால் தமிழகத்துக்கான வரி வருவாய் குறைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 முக்கிய அறிவிப்புகள்

காவல்துறைக்கு ரூ.9567.93 கோடி நிதி ஒதுக்கீடு.

நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1437.82 கோடி ஒதுக்கீடு.

தீயணைப்புத்துறைக்கு ரூ.436.68 கோடி ஒதுக்கீடு.

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப் புத் திட்டப்பணிகள் 2022 மார்ச் மாதம் முடிக்கப் படும்.

2021-22இல் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.41447 கோடியாக இருக்கும்.

இயற்கையாக உயிரிழந்தால் ரூ.2 லட்சம்.

மின்சாரத்துறைக்கு ரூ.7,217 கோடி நிதி ஒதுக்கீடு.

உயர்கல்வித்துறைக்கு ரூ.5,470 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழக சுகாதாரத்துறைக்கு ரூ.19,420 கோடி நிதி ஒதுக்கீடு.

கோவை மெட்ரோ திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள   குடும்பங்களின் தலைவர் இயற்கையாக உயிரிழந்தால் ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

தமிழகத்தின் கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

பயிர்க்கடன் தள்ளுபடிக்காக இடைக்கால வரவு-செலவு திட்ட மதிப்பீட்டில் ரூ.5000 கோடி ஒதுக்கீடு.

2 ஆயிரம் மின்சார பேருந்துகள் உள்பட 12 ஆயி ரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.

மாநிலத்தின் மொத்த வரி வருவாய் ரூ.1,35,641 கோடியாக இருக்கும் என மதிப்பீடு.

Comments