2002 இல் குஜராத்தில் நடந்த படுகொலையை இந்தியா மறக்கவில்லை தி.மு.க.வைப்பற்றி பேச மோடிக்கு உரிமை இல்லை:

 தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின்


விழுப்புரம், பிப்.27 விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.. சார்பில், திண்டிவனம் அடுத்துள்ள தீவனூரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நேற்று (26.2.2021) நடந்தது. இதில், தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

இடைக்கால பட்ஜெட்டில் கற்பனை அறிவிப்புகள் வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்புகளை ஏன் கடந்த ஆண்டுகளில் வெளியிடவில்லை. தமிழகத்தை, 5.70 லட்சம் கோடி கடன் வாங்கியது மட்டுமே இந்த அரசுக்கு தெரிந்த ஒரே நிதி நிர்வாகமாக உள்ளது. 40 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம்விட்டு கஜானாவை காலி செய்து, தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டனர். 

கடந்த வாரம் வந்த மோடி, பழனிசாமி, பன்னீர்செல்வம் கையை பிடித்து காட்டியது ரெண்டும் ஊழல் கைகள். அதை பிடித்து இந்த ஊழலுக்கு மோடியும் உடந்தை போல காட்டியுள்ளார். தவறான பொருளாதாரக் கொள்கையால் வர்த்தகத்தை சிதைத்துவிட்டார். டெல்லி விவசாயிகள் மீது இரக்கம் காட்டாத மோடி, பிரதமர் என்பதை மறந்து தி.மு..வை விமர்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். திமுக ஆட்சியில் அனைத்து மாவட்டங்களிலும் அராஜ கத்தை கட்டவிழ்த்து விட்டதாக சொல்லியுள்ளார். எந்த ஆதாரத்தை வைத்து பேசுகிறார்.

துளியளவும் உரிமை கிடையாது

2002 இல் குஜராத்தில் நடந்த பச்சை படுகொலையை இந்தியா இன்னும் மறக்கவில்லையே. தி.மு..வை குற்றம் சாட்ட துளி அளவும் இவருக்கு உரிமை கிடையாது. குடியுரிமை சட்டம் மூலம் மக்களை வேதனைக்குள்ளாக்கியது யார்?  பழனிசாமியை மிரட்டி பணியவைத்து, அப்பாவி .தி.மு.. தொண்டர்களின் வாக்கை பாஜவுக்கு திருடி செல்ல வந்துள்ள மோடிக்கு தி.மு..வைப்பற்றி பேச உரிமை இல்லை. சமீபகாலமாக தமிழகம், புதுவையில் பாஜகவில் சேர்ந்த சிலரின் பின்னணியைப் பற்றி மத்திய உளவுத்துறை மூலம் விசாரியுங்கள், உள்துறை அமைச்சரை விசாரிக்க சொல்லுங்கள். (புளியந்தோப்பு அஞ்சலை, புதுவை எழிலரசி, கல்வெட்டு ரவி உட்பட 26 பேரின் பெயர்களை படித்தார்) தி.மு..வை பற்றி பேசுவதை இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள். ஒரு பெண் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா என்று நேற்று பேசியுள்ளார். மாநிலங்களில் சிறந்த ஆட்சியை கொடுத்தது தமிழகத்தை சேர்ந்த இந்த லேடியா, குஜராத்தை சேர்ந்த மோடியா என்று கேட்டவர் ஜெயலலிதா.

வாக்கை அபகரிக்க முயற்சி

5 ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது. 2016 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி ஓசூர், சென்னையில் மோடி பேசியதை மறந்துவிட்டீர்களா? ஊழல் மேல் ஊழல் செய்யும் ஜெயலலிதா என்று 2016 மே மாதம் 5 ஆம் தேதி மதுரையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.  அப்போது தமிழக பாஜக ஒரு கார்ட்டூன் வெளியிட்டது. அதில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை முதல்வர் சந்திக்க மறுத்துவிட்டார். அதை யொட்டி வெளியிடப்பட்ட கார்ட்டூனில், அம்மா பியூஸ் கோயல் வந்திருக்கார் என்று வீட்டுப்பணியாளர் சொல்ல, சசிகலா அம்மா பிசியாக உள்ளார் என எழுதி, ஜெயலலிதாவும் சசிகலாவும் சீட்டு விளையாடுவது போல வெளியிட்டார்கள். அப்படிப்பட்ட மோடி அதிமுக தொண்டர்களை ஏமாற்ற வந்துள்ளார். இதுபோன்ற நாடகங் களை பார்த்து பார்த்து பழகியவர்கள் தமிழக மக்கள். தனது கொள்ளையில் இருந்து தப்ப மோடியை ஆதரிக்கிறார் பழனிசாமி. .தி.மு.. தொண்டர்களின் வாக்கை அபகரிக்க வருகிறார் மோடி. இந்த சந்தர்ப்பவாத கூட்டணியை மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். மக்கள் ஏமாற மாட்டார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

Comments