பட்டாசு ஆலை விபத்து உயிரிழப்பு 20 ஆக உயர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அச்சங்குளத்தில் நேரிட்ட பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை (பிப்.12) நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 19 பேர் உயிரிழந்தனர். இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த சாத்தூர் அமீர்பாளையத்தைச் சேர்ந்த வனராஜா (51) ஞாயிறன்று (பிப்.14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், சிவகாசி உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாஸ்ட்டேக் இல்லையெனில்  இரட்டிப்பு கட்டணமாம்!

இன்று (பிப். 15) நள்ளிரவு முதல் ஃபாஸ்ட் டேக் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளைக் கடக்கும்  எந்தவொரு வாகனமும் இரட்டிப்பாக  கட்டணம் செலுத்த வேண்டும் என்று சாலை போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட் டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளதும்,  பாஸ்ட் டேக் பொருத்துவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது என்றும்  ஏற்கெனவே மத்திய அரசு அறிவித்துள்ளது.

Comments