விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்த 18 வயது சிறுமியை எதிரியாக மத்திய பா.ஜ.க. அரசு கருதுவது ஏன்?: மக்களவையில் காங்கிரஸ் கேள்வி

புதுடில்லி, பிப். 10- ‘விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதர வாக பேசிய சுவீடனை சேர்ந்த 18 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேடா துன் பர்க்கை மத்திய அரசு எதிரி யாக கருதுவது ஏன்என மக்களவையில் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

விவசாயிகள் போராட்ட விவகாரம் காரணமாக மக்க ளவை தொடர்ந்து அமளி நிலவி வந்த நிலையில்,  8.2.2021 அன்று அவை தொடங்கிய தும் கூச்சல் குழப்பம் ஏற்பட் டது. இதனால் மாலை 5 மணி வரை அவை ஒத்திவைக்கப் பட்ட பிறகு, குடியரசுத் தலை வர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது.

அப்போது பேசிய காங் கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘‘குடி யரசு தின விழா டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற் பட்டதன் பின்னணி பெரிய சதி உள்ளது. நீங்கள் விவசாயிகளை பொறி வைத்து சிக்க வைத்துள்ளீர்கள். அவர்கள் மீது வழக்குகள் தொடர்ந்து விவசாயிகளை பயமுறுத்து கிறீர்கள். செங்கோட்டையில் அவ்வளவு பேர் நுழைய எப்படி அரசு அனுமதித்தது? இதைப் பற்றி விரிவான விசா ரணை நடத்த வேண்டும், இதைப் பற்றி விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிக் கும், சுவீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான 18 வயது சிறுமி துன்பர்க்கை கூட மத்திய அரசு எதிரியாக கருதி அஞ்சுவது ஏன்?’’ என் றார்.

7 பேரையும் மனிதாபி மானத்துடன் விடுதலை செய்ய வேண்டும்

திமுக எம்பி. டிஆர். பாலு பேசுகையில், ‘‘திமுக அடிப் படையிலேயே விவசாயிகள் நலனுக்கான கட்சியாகும். விவசாயிகள் 74 நாட்களாக வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 8 விவசாயிகள் உயிரிழந்துள் ளனர். 12 பேரை அரசு கைது செய்துள்ளது. மாநில அதிகா ரத்துக்குட்பட்ட கல்வித் துறையை மத்திய அரசு அபகரிக்க முயற்சிக்கிறது. பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் மத்திய அரசு தலையிடுகிறது. மத்திய கல்வி நிறுவனங்களின் வேலை களில்இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீட்டை தராதது ஏன்? உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் 50% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு தர மறுக்கிறது.

தமிழை மத்திய அரசின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்க வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயங்களில் தமிழ் மொழி கற்பிக்கப்படாதது வெட்கக் கேடானது. இலங்கை கடற்படையால் தமிழக மீன வர்கள் தாக்கப்படுவது குறித்து மத்திய அரசு மவுனமாக இருக்கிறது. கடந்த 30 ஆண்டு களாக பேரறிவாளன் உள் ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 7 பேரையும் மனி தாபிமானத்துடன் விடுதலை செய்ய வேண்டும். தற்போது குடியரசுத் தலைவர் கையில் இருக்கும் முடிவை விரைந்து எடுக்க வேண்டும்’’ என்றார். விவாதம் நேற்று நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது என் பது குறிப்பிடத்தக்கது.

Comments