சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 17 பேர் பலி

விருதுநகர், பிப். 13- சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நடந்த பயங்கர வெடி விபத்தில் 7 மாத கர்ப்பிணி உள்பட 17 பேர் பலியாகினர். தீயில் கருகியதால் பல உடல் களை அடையாளம் காண முடியவில்லை. 31 பேர் படு காயமடைந்து மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏழாயிரம்பண் ணையை சேர்ந்த சந்தனமாரி என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. 'பேன்சி' ரக பட்டாசு தயாரிப்பு உரிமம் பெற்ற இந்த ஆலையை விஜயகரிசல் குளத்தை சேர்ந்த சக்திவேல் உட்பட 4 பேருக்கு குத்த கைக்கு விட்டுள்ளார். ஆலை யில் 20 அறைகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்தது. இங்கு, 89 பேர் வேலை பார்த்துள்ளனர். ஆலை 'போர்மேன்' விஜயகுமார் 'பேன்சி' ரக பட்டாசுகளுக்கு நேற்று (12.2.2021) மதியம் மணி மருந்து கலக்கும்போது ஏற்பட்ட உராய்வினால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட பயங்கர தீ மளமளவென அடுத்தடுத்த அறைகளுக்கு பரவி 13 அறைகள் வெடித்து தரை மட்டமானது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். தீயில் சிக்கிய தொழி லாளர்களின்அபாய குரல் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்ததும் சாத்தூர், வெம்பக்கோட்டை தீய ணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து இடி பாடுகளில் சிக்கி இருந்தவர் கள் உடல்களை மீட்டனர். பட்டாசு ஆலையில் உடல் கருகி அடையாளம் தெரியாத அளவில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் சின்ன தம்பி (32), ரெங்கராஜ் (57), ரவிச்சந்திரன் (40), செல்வி, கண்ணன் உட்பட 8 பேர் உயி ரிழந்துள்ளனர். மதுரைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல் லும் வழியில் 7 மாத கர்ப்பிணி கற்பகவள்ளி (22) உயிரிழந் தார். இதுவரை விபத்தில் மொத்தம் 17 பேர் உயிரிழந் துள்ளனர். இவர்களில் 7 பேரின் உடல்கள் அடையா ளம் காணப்பட்டுள்ளது. மீத முள்ளவர்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு உடல் கருகி கிடக்கின்றனர். சாத்தூர் அரசு மருத்துவ மனையில் 22 பேரும், சிவகாசி அரசு மருத்துவமனையில் 7 பேரும், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 2 பேர் என 31 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சி யர் கண்ணன், காவல் துறை மதுரை சரக தலைவர் ராஜேந் திரன் ஆய்வு செய்தனர். பட் டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக 3 பேர் மீது வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் கண்ணன் கூறுகையில், ‘‘அச்சங்குளம் கிராமத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்த 24 பேர் சாத்தூர் அரசு மருத் துமனைக்கு கொண்டு வரப் பட்டனர். இதில் 60 சதவீதத் திற்கு மேல் காயமிருந்த 14 பேர் மதுரை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். 9 பேர் சிவகாசிக் கும், ஒருவர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்களை விரைந்து உடற்கூறாய்வு நடத்தி உறவினர்களிடம் வழங்கப்படும். சில உடல் களை வைத்து அது ஆணா, பெண்ணா என்பதை அடை யாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது. உறவினர்களை வைத்து சரி பார்க்கப்படுகிறது’’ என்றார்.

Comments