இயற்கையை அழித்து கட்டப்பட்ட நீர் மின் திட்டம் எச்சரித்தது போன்றே பேரழிவைச் சந்தித்தது உத்தரகாண்ட்: பனிச்சரிவில் சிக்கி 150 பேர் உயிரிழப்பு!

அரித்துவார், பிப்.8 உத்தரகாண்ட் மாநி லத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 150 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

உத்தரகாண்ட் மாநிலத்தின்  சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் தவுளி கங்கா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கடும் வெள்ளப் பெருக்காக மாறி இருக்கிறது. ஆற் றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல தெரிவிக்கப் பட்டது.

இந்நிலையில், உத்தரகாண்ட் சமோலியில் பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 100 முதல் 150 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேசிய பாதுகாப்பு மீட்புப் படை குழு விரைந்து சென்று பணியில் ஈடுபட்டு வருகிறது.

உத்தரகாண்டில் நந்ததேவி பனிக் குன்று உடைந்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அதன் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் நீர் மின் திட்ட கட்டமைப்புகள் சேதமடைந் துள்ளன. 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப் பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து உத்தர காண்ட் முதல்வருடன், உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி யில் தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டுள்ளார். வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களை மீட்பதற்கு பேரிடர் குழு கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மோடி அரசு

அனுமதி வழங்கிய திட்டம்

2017-ஆம் ஆண்டு மோடி அரசு இந்த நீர்மின் திட்டங்களுக்கு அனு மதி வழங்கியது. இப்பகுதியில் இயற் கைச்சூழல் பாதிக்கப்படும். மேலும் பெருவெள்ளம் வரும் குறுகிய பகுதி. இங்கு நீர்மின் திட்டங்கள் கொண்டு வந்தால் நீரோட்டம் காரணமாக பெரும் சேதம் ஏற்படும். அப்படி ஏற்படும் போது நூற்றுக்காணக்கான உயிர்கள் பலியாகும். அதுமட்டுமல் லாமல் ஆற்றின் போக்கு மாறிவிடும். அப்படி மாறினால் பெரும் இயற் கைச்சூழல் பேரழிவு ஏற்படும் என்று பல சூழலியல் ஆர்வலர்கள், புவியியல் ஆய்வாளர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக டில்லி, அரித் துவார், டெகராடூன், மற்றும் சண் டிகர் போன்ற பகுதிகளில் தொடர் போராட்டம் நடைபெற்றது. ஆனால் இதுகுறித்து மோடி அரசு கவலைப் படவில்லை. இந்த நீர்மின் திட் டத்தின் கீழ் பகுதியில் ராம்தேவ் உள்ளிட்ட பல முக்கிய நபர்களின் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இவற்றிற்குத் தேவையான மின்சாரம் வழங்கவே மோடி, தானே இந்தத் திட்டத்திற்கு முனைப்பாக இருந்து விரைந்து செய்துமுடிக்க உத்தரவிட் டுள்ளார் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர். இவர்கள் கூறி யது போலவே வேலைகள் இரவு பகலாக நடந்து அடுத்த ஆண்டு உத்தராகாண்ட் தேர்தலுக்கு சிறிது முன்பாக நீர்மின் திட்ட விரிவாக்கப் பணிகள் முடிந்து மின்சாரம் தயா ரிக்க அழுத்தம் கொடுத்தது மத்திய, மாநில அரசுகள்.

ஆனால், எச்சரித்தது போன்றே நந்தாதேவி பனிக்குன்றின் கீழ்பகுதி யில் உடைப்பு ஏற்பட்டதால் உள்ளே உள்ள பல லட்சக்கணக்கான லிட் டர் தண்ணீர் திடீரென்று வெளியேறி வழியில் உள்ள அனைத்தையுமே அழித்து விட்டது. இந்த பகுதியில் மரங்கள் வெட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலை யிலும் சில நூறு மரங்கள் மட்டுமே தளவாடம் கொண்டு செல்வதற்கு வசதியாக இருக்க  வெட்டப்பட்டது என்று அரசு நீதிமன்றத்தில் கூறியிருந்தாலும், 2010 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் மற்றும் தற் போது எடுக்கப்பட்டப் படத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆயி ரக்கணக்கான மரங்கள் வெட்டப் பட்டுள்ளது தெரியவந்துள்ளது.


Comments