பிரியங்கா கூட்டத்திற்கு செல்லும் மக்களை தடுக்க 144 தடை உத்தரவு : உ.பி. அரசு

லக்னோ, பிப்.11  உத்திரப் பிரதேசத்தில் உள்ள சஹரன் பூரில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் மகா பஞ்சாயத்து நடை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட் சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொள்வதாக அறிவித்திருந் தார்.

இந்நிலையில் சஹரன் பூரில் ஏப்ரல் 5ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப் பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல்  முன் எச்சரிக்கை நட வடிக்கை,  சட்டம்  ஒழுங்கு காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு வழக்கமான நடவடிக்கையே என்றும் அவர் கூறி உள்ளார். ஆனாலும் சஹரன்பூர் மகா பஞ்சாயத்தில் திட்ட மிட்டபடி கலந்து கொள்ள போவதாக பிரியங்கா காந்தி உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

Comments