ஜெனீவா, பிப். 6-- கரோனா தடுப்பூசியை உலகம் முழுவ தும் வழங்க, சீரம் நிறுவனத் துடன் அய்.நா. சிறுவர் அமைப் பான யுனிசெப், நீண்ட கால ஒப்பந்தம் செய்துள்ளது.
கரோனா தடுப்பூசி தயாரிப்பில் உலகின் மிகப் பெரிய உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது. இதனால் பல நாடுகளும், அமைப்புகளும் இந்த தடுப்பூசிக்காக இந்தியாவை அணுகி வருகின்றன. இந் நிலையில், உலகம் முழுவதும் 100 ஏழை நாடுகளில் 110 கோடி தடுப்பூசிகளை பயன் படுத்த, அய்.நா. சிறுவர் அமைப் பான யுனிசெப் திட்டமிட்டு உள்ளது. இதற்காக, புனேயை சேர்ந்த சீரம் இந்தியா நிறுவனத்துடன் நீண்ட
கால ஒப்பந்தத்தை செய் தது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி, அமெ ரிக்காவின் ‘நோவவாக்ஸ்’ தடுப்பூசியை சீரம் தயாரித்து வருகிறது. இந்த 2 தடுப்பூசிக ளையும் யுனிசெப் வாங்குகிறது.